Irandam Kuthu poster

கவுதம் கார்த்திக், விஜே ஷா ரா, யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா, சந்திரிகா உள்ளிட்டோரின் நடிப்பில் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம். டபுள் மீனிங் அதிகம் கொண்ட இந்த திரைப்படம் இளைஞர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

115 நிமிடங்கள் கொண்ட இந்த திரைப்படம் 50 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் கலக்கி 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இதனால் மன த்ரிப்தி அடைந்த பட குழுவினர் இருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட் 2வெளியிடப்போவதாக இந்த ஆண்டு ஆரம்பத்தில் அதிகார பூர்வமாக தெரிவித்திருந்தனர்.

Iruttu Arayil Murattu Kuthu 1

அதன் விளைவாக இருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட் 2 போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு “இரண்டாம் குத்து” என்று பெயரிட்டு கவுதம் கார்த்திக் விஜே சா ரா விற்கு பதில் இந்த முறை அந்த திரைப்பட இயக்குனர் சந்தோஷ் அவர்களும் பிக் பாஸ் புகழ் டேனியல் அவர்களும் நடிக்க உள்ளனர். இதில் பெண் கதாபாத்திரத்தில் வட இந்திய நடிகைகள் அக்ரிடி சிங்க் மற்றும் மீனால் நடிக்கவுள்ளனர். விஜய் தொலைக்காட்சி கலக்க போவது யாரு பிரபலம் டி எஸ் கே மற்றும் மொட்டை ராஜேந்தர் இதர கதாபாத்திரங்களில்.

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படமே வரம்பு மீறிய வகையில் எடுத்திருந்த நிலையில் இரண்டாம் குத்து போஸ்டர் ரசிகர்களின் மத்தியில் முகம் சுழிக்க வைத்துள்ளது. அதிலும் வாழைப்பழத்தை அந்த இடத்தில் வைத்து வெளியிட்டிருப்பது பெண்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது.

தமிழ் திரைப்படங்களுக்கு குடும்ப ரசிகர்கள் பலரும் உள்ள நிலையில் இந்த மாதிரியான போஸ்டர் குழந்தைகளையும் தமிழ் கலாச்சாரத்தையும் குட்டிச்சுவராகின்றது என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த கன்றாவியை நீங்களே பாருங்கள்!

Irandam Kuthu Poster

 

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படமே பல சர்ச்சைகளுக்கு பின் இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியானது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here