தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் முன்னணி கதாபாத்திரமாக தோன்றியவர் சித்ரா. 90’களில் 60-ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த சித்ரா 2004-ம் ஆண்டிற்கு பின்னர் துணை கதாபாத்திரங்களில் தோன்ற ஆரம்பித்து விட்டார். இப்படி தனது வாழ்நாள் முழுவதும் நமது பொழுதுபோக்குக்காக அர்ப்பணித்த சித்ராவின் நிஜ வாழக்கையில் நடந்த சோகத்தை பற்றி இந்த பதிவினில்
படையப்பா, முகவரி, புரியாத புதிர், புது புது ராகங்கள், என்றும் அன்புடன் போன்ற வெற்றித் திரைப்படங்களில் நடித்த சித்ரா 1989-ம் ஆண்டு “புது புது அர்த்தங்கள்” திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் மலையாளம் தெலுங்கு கன்னட திரைப்படங்களில் சித்ரா நடித்து வெளிவந்த திரைப்படங்கள் ஏராளம்.
சித்ரா என்று சொன்னாலே மக்கள் பலருக்கும் அறியும்படி சாதனைகளை படைத்த இவர், ஏன் வெற்றிகளுக்கு பின்னர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று சமீபத்தில் நடந்த தனியார் தொலைக்காட்சி கலந்துரையாடலில் கேள்விகள் முன் வைக்கப்பட்டன. இதற்கு அவர் கூறிய பதில்கள் ரசிகர்களின் மனதை உருக்கும்படி அமைந்துள்ளது.
இதைப்பற்றி அவர் கூறுகையில் “என் தந்தை மீது மிகுந்த பாசமும் மதிப்பும் உள்ளவள், அவர் எனது வாழ்க்கையில் ஒரு முக்கிய நபராக இருந்தார்! இனிமேலும் இருப்பார். ஒரு கால கட்டத்தில் அவரது மறைவு என்னை மிகவும் பாதித்தது. அதில் இருந்து மீள நினைத்த நான் திருமணத்தை பற்றி யோசிக்கவே இல்லை” எனக் கூறினார்.
சரி 40 வயதுக்கு மேலும் திருமணம் செய்யும் இந்த காலக்கட்டத்தில் 47 வயதாகும் நீங்கள் இனிவரும் காலங்களில் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்ட பொழுது, “எனக்கு திருமணத்தை பற்றின சிந்தனையே இல்லை” என்று முடித்தார்.