தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களால் 2020 யில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 இன்று மாலை நான்கு மணிக்கு தொடங்க உள்ளது. இந்த சீசனிலும் மற்ற சீசன்களை போல் நடிகர் கமல் ஹாசன் அவர்களே தொகுத்து வழங்குவர் என்று அறிவிக்க பட்டிருந்த நிலையில் அதற்கான ப்ரோமோக்களும் வெளியிட்டிருந்தார். அதற்கு சவால் விடும் வகையில் வனிதா வெளியிட்டிருக்கும் ப்ரோமோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 யில் பங்கேற்ற போட்டியாளரான வனிதா விஜயகுமார் அவர்களால் அந்த சீனில் சண்டைக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. ஒரு வழியாக அவரை எலிமினேஷனுக்காக நாமினேட் செய்து வீட்டை வீட்டுக்கு வெளியேற்றிய பின்னர் சகா போட்டியாளர்கள் பெரும் மூச்சு விட்டு முடிப்பதற்குள் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக வந்து மீண்டும் தன் ஆட்டத்தை ஆர்மபித்தார்.
இதனால் தங்கள் டி ஆர் பி யை உயர்த்திக் கொண்ட விஜய் தொலைக்காட்சி, அவரை பல நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து ரசிகர்களின் மத்தியில் ஒரு பிரபலமாக மாற உதவினர். சமீபத்தில் சொல்வதெல்லாம் உண்மை தொகுப்பாளர் லக்ஷ்மியை வறுத்தெடுத்த பின்னர் அடுத்த லெவெலுக்கு போன வனிதா தற்பொழுது யூடூப் டி ஆர் பி காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றார்.
அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 4 தொடங்கவுள்ள நிலையில் வனிதா அவர்கள் வீட்டினுள் நடக்கும் தவறுகளை தட்டி கேட்க களமிறங்கவுள்ளார். இது வரை கமலுக்கு எதிராக எவரும் குரல் கொடுக்காத நிலையில் வனிதா அவர்கள் தற்பொழுது கொடுப்பதாக கூறியுள்ளார். ஒரு தனியார் யூடூப் சேனலுடன் இணைத்திருக்கும் வனிதா விஜயகுமார் இனி வீட்டினுள் நடக்கும் பிரச்சனைகளை கமலை போல் விவாதிக்க போகிறாராம். அதற்கான ப்ரோமோ இங்கே! இனி பிக் பாஸ்ஸுடன் சேர்த்து வனிதாவும் வேடிக்கை காட்ட போகிறார் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
athu ponna athu minda