சிங்கப்பூரில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்து தமிழ் பாடல்கள் மூலம் பிரபலமாகி வரும் பின்னணி பாடகர் பிரகதி குருபிரசாத். 23 வயதாகும் இவர் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3-வில் தன் குரல் வளம் மூலம் ஆடிஷனில் தேர்தெடுக்கப்பட்டு போட்டியாளராக பங்கேற்றார். அப்பொழுது சின்ன குழந்தையாக தோற்றமளித்த பிரகதி 8 வருடங்களாக மிகவும் மாறி வேற மாதிரி தோற்றமளிக்கிறார்.
கர்னாடிக் இசை குடும்பத்தை சேர்ந்த பிரகதி தன் ஆரம்பக்கட்ட இசையை தன் தந்தையிடமும், அதன்பின் பிரபல வாசிப்பாளர் சுதா ரகுநாதனிடம் கற்று தேர்ந்த ‘சங்கீத ஸ்வாமிநாதனிடமிருந்தும் இசையில் உள்ள நுணக்கங்களை கற்றுக்கொண்டார். அவர்கள் ஆசிர்வாதத்துடன் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3 பங்கேற்று 2 ஆம் இடத்தை பிடித்தார். அந்த சீசனில் முதல் இடத்தை பிடித்த ஆஜீத் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் சிங்கர் மூலம் திரை உலகினர் பார்வைகளுக்கு வந்த பிரகதி அவர்கள் இதுவரை 20-ற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். ஒசகா ஒசகா, தேன் குடிக்க, உசுரையே தொலைச்சேன் போன்ற பாடல்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தது. பாடல்களில் மட்டும் நிறுத்திவிடாமல் நடிப்பிலும் இறங்கிய பிரகதி அவர்கள் 2014-ம் ஆண்டு பாலா இயக்கத்தில் சசிக்குமார் வரலக்ஷ்மி நடிப்பில் வெளிவந்த “தார தப்பட்டை” திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இப்படி மக்களின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்து வரும் பிரகதி அந்த இடத்தை வலுப்படுத்த அவரது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்படி வெளியிட்ட சில புகைப்படங்கள்! அதே போல் இவர் அடிக்கடி நடிகர் அசோக் செல்வனுடன் நெருக்கமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்ததால் ஒருவேளை இருவரும் காதலிக்கிறார்களா என்று கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அப்படி இவர்கள் காதலித்து ஜோடி சேர்ந்தாலும் நல்ல ஒரு ஜோடியாகத்தான் இருப்பார்கள் என்பதில் குழப்பமில்லை.