தனது சுட்டித்தனமான நடிப்பால் ரசிகர்கள் மனதை வென்ற சில நடிகைகளில் ஜெனிலியாவும் ஒன்று. 2000’களில் கலக்கி வந்த ஜெனிலியா திருமணத்திற்கு பின்னர் சினிமாக்களில் தோன்றுவதை மொத்தமாக நிறுத்தி விட்டார். இப்படி ஒரு திறமை வாய்ந்த நடிகை திரைப்படங்களில் தோன்றாதது ரசிகர்களுக்கு வருத்தமளித்த நிலையில் தான் திரும்பவும் திரைப்படத்தில் கம் பேக் கொடுப்பதாக ஜெனிலியா அறிவித்துள்ளார்.
1987-ம் ஆண்டு மும்பையில் பிறந்த நடிகை ஜெனிலியா ஷங்கர் ஷண்முகம் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படம் மூலம் 2003-யில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடக்கமே வெற்றியாக அமைந்த இத்திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடா போன்ற மற்ற தென் இந்திய மொழிகளிலும் தோன்ற அடித்தளமாக அமைந்தது.
நல்ல கதைகளை தேர்தெடுத்து நடிப்பதில் வல்லவரான இவர் சச்சின் சென்னை காதல் சந்தோஷ் சுப்ரமணியம் உத்தமபுத்திரன் வேலாயுதம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை தந்துள்ளார். இவர் நடித்த 6 தமிழ்
படங்களுமே வெற்றி படங்களாக அமைந்தது. இவருக்கு தமிழை தவிர்த்து தெலுங்குவிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி பிரகாசமாக திரையில் ஜொலித்த ஜெனிலியா கடந்த 2012-ம் ஆண்டு பிரபல ஹிந்தி பட நடிகர் ரிடேய்ஸ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்தார். இவரது தந்தை மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்பது குறிபிடித்தக்கது. திருமணத்திற்கு பின் நடிக்காத ஜெனிலியா இது வரை 4 படங்களில் மட்டும் கெஸ்ட் ரோல்லில் தோன்றமளித்துள்ளார். ரிடேய்ஸ் தேஷ்முக் ஜெனிலியா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இத்தனை நாள் சினிமாவை விட்டு விலகி இருந்த ஜெனிலியா இனியும் சினிமாவில் தோன்ற மாட்டார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் கம் பேக் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதைப் பற்றி அவர் கூறுகையில் “திருமணத்திற்கு பின்னர் கணவர் உடன் நேரம் செலவிடுதல், குழந்தைகளை பார்த்து கொள்ளுதல் என அவர்கள் மீது கவனம் கொண்டதால் ‘நடிப்பதை தள்ளி வைத்தேன். தற்பொழுது, எனது இரு குழந்தைகளும் வளர்த்து விட்டார்கள் ஆதலால் திரும்பவும் சினிமாவில் நடிக்க நான் தயார் ஆனால் அம்மா கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்க மாட்டேன்.” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே மீனா கம் பேக் கொடுக்கும் நிலையில் இவரும் கம் பேக் கொடுப்பது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.