கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வர பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் 100 ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள தலைவர் ரஜினிகாந்த் தன் சினிமா வாழ்வை ஒரு சாதாரண கண்டக்டராக பணியாற்றி பின்னரே அவர் ஆரம்பித்தார் என்பது நம் அனைவர்க்கும் அறிந்தவையே. அப்படி கண்டக்டராக இருந்த பொழுது அவரது புகைப்படங்களை பார்த்ததுண்டா? இல்லையெனில் இந்த பதிவு உங்களுக்காக.
ஒரு சாதாரண குடும்பத்தில் 1950-ம் ஆண்டு மைசூரில் பிறந்த சிவாஜி ராவ் கேக்வாட் என்பவர் தான் தற்பொழுது ரஜினிகாந்தாக கலக்கி வருகிறார். மற்ற நடுத்தர குடும்பத்தின் இளைஞர்களை போல் ஆரம்ப காலக்கட்டத்தில் பல கஷ்டங்களையும் அவமானங்களையும் சந்தித்த ரஜினிகாந்த் அவர்கள் பெங்களூருரில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார்.
அதுமட்டுமின்றி கூலி வேலைகளும் செய்து வந்த சிவாஜி ராவ் சென்னையில் உள்ள திரைப்படக் கல்லூரியில் படித்து நடிகராக ஆசைப்பட்டார். தன் குடும்பத்தினர் அதற்கு சம்மதிக்காத பொழுதிலும் தன் நண்பரிடம் உதவி பெற்று அந்த கல்லூரியில் சேர்ந்து படித்தார். படிக்கும் பொழுதே பிரபல தமிழ் பட இயக்குனர் கே பாலச்சந்தர் கண்ணில் பட்ட ரஜினிகாந்திற்கு “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ரஜினிகாந்த் தற்பொழுது இந்திய சினிமாவிலேயே மிக பெரிய ஜாம்வபனாக போற்ற படுகிறார். பல நடிகர்களுக்கு முன்னோடியாக திகழும் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடா ஹிந்தி என பல மொழிகளில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். எந்திரன் திரைப்படம் இவரது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும். இவர் திருமணம் செய்துள்ளது தமிழகத்தை சேர்ந்த லதா என்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சில காணக்கிடைக்காத புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!