“மாயண்ண வந்துருக்காப்புல, மாப்பிள மொக்கச்சாமி வந்துருக்காப்ல மற்றும் நம்ம உறவினர்கள் எல்லாம் வந்திருக்காங்க, வா மா மின்னல்!!” என்ற சூப்பர் ஹிட் காமெடி சரத் குமார் நடிப்பில் வெளிவந்த மாயி என்ற திரைப்படத்தில் இடம்பெறும். அதில் மின்னலாக நடித்திருந்த பெண் சில நொடிகள் மட்டும் தோன்றிருந்தாலும் அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

எப்பொழுது அவரை பாத்தாலும் அந்த காமெடி தான் நினைவுக்கு வரும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த காமெடி மூலம் மின்னல் தீபா என்று அடமொழியை ரசிகர்களிடம் இருந்து பெற்றார். அதன் பின் தமிழ் படங்களில் தீபா நடித்திருந்தாலும் பெரிய அளவில் அவருக்கு வெற்றி எதும் கிடைக்கவில்லை. ஆதலால் தொலைக்காட்சிகள் பக்கம் திரும்பிய தீபா தற்பொழுது சில சீரியல்களில் துணை கதாபாத்திரமாக நடித்து வருகிறார்.

Minnal Deepa

இவரது தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்த வரை ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்த தீபா, சில நாட்களிலேயே அவருடன் மன வருத்தம் ஏற்பட்டு விவாகரத்து பெற்றார். அதன் பின் தனியாக வசித்து வந்த தீபாவை தன் உறவினர் ஒருவர் காதல் டார்டர் கொடுத்து வந்த நிலையில் அவர் காதலிக்க மறுத்ததால், சினிமா படப்பிடிப்புக்கு சென்று அவரை அடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் தன் வாழக்கையை இதுபோன்ற , மிருகங்களிடமிருந்து பாதிக்க முற்பட்ட தீபா தனக்கான துணையை தேடிவந்தார். இப்பொழுது அந்த துணையும் கிடைத்து திருமணமும் நடந்து முடிந்தது. கொரோனா ஊரடங்கால் தீபாவின் வீட்டிலேயே முக்கியமான உறவினர்களுடன் நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருமணம் முடிந்த கையோடு தீபா தன் கணவரின் புகைப்படங்களை தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வாழ்த்த கூறி கேட்டுள்ளார். இந்த ஜோடி பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

Minnal Deepa
Minnal Deepa

 

View this post on Instagram

 

My lovable purusha love you da❤️

A post shared by deepa (@minnaldeepa) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here