தமிழ் சினிமாவில் பல புது முக நடிகைகளில் அறிமுகமாகி வரும் நிலையில் 2016-ம் ஆண்டு சோலை பிரகாஷ் இயக்கிய “பலே வெள்ளையத்தேவ” என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மலேசியா தமிழ் பட நடிகர் ரவிச்சந்திரன் பேத்தியான தான்யா ரவிச்சந்திரன் தன் தாத்தாவின் திரைப்படங்களை ஊன்றுகோலாக வைத்து தான் சினிமாவில் களமிறங்கியுள்ளார்.
கிளாசிக்கல் நடனக் கலைஞர் லாவண்யாவின் மகளான தான்யா தன தாயிடம் நடனப் பயிற்சியை பெற்று சென்னை அளவிலான நடன போட்டிகளில் கலந்துள்ளார். முதலில் இயக்குனர் மிஷ்கினால் திரைப்படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டு மிஸ்கின் படத்தில் நடிக்க காத்திருந்த பொழுது மிஸ்கின் துப்பறிவாளன் திரைப்படத்தில் பிஸியாக இருந்ததால் காலத் தாமதமாகியது.
அதனால் ராதா மோஹனால் அழைக்கப்பட்டு பிரிந்தவனம் திரைப்படத்தில் நடிக்க கால் சீட் கொடுத்தார் என்னெனியும் பலே வெள்ளயத்தேவா திரைப்படம் தான் முதலில் வெளியானது. முதல் இரண்டு படங்களில் தன்யாவிற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டாலும் மூன்றாவதாக நடித்த கருப்பன் திரைப்படம் இவருக்கு மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கொடுத்தது.
சென்னையில் பிறந்த தன்யாவிற்கு 24 வயதாகிறது. அவரது வெளித்தோற்றத்தை வைத்து ரசிகர்கள் அனைவரும் அவரது வயது 28-30 இருக்கும் என கணக்கிட நிலையில் 24 வயது ஆகும் இளம் பெண் என்பதை அறிந்த ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஷாக்காக அமைந்தது அதுமட்டுமின்றி அவரது உண்மையான பெயர் தான்யா அல்ல அபிராமி ஸ்ரீராம் என்பதே அவரது உண்மையான பெயர் இயக்குனர் மிஷ்கினின் பரிந்துரையால் தான்யா என்று பெயர் மாற்றிக்கொண்டார்.
மேலும் தான்யா ரவிச்சந்திரன் நமக்கு கருப்பன் படத்தில் ஹோம்லியாக பார்த்து நம் மனதில் பதிந்த நிலையில் தற்பொழுது மாடர்ன் லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!
View this post on Instagram