சமையலில் நிறத்தையும் சுவையையும் கொடுக்கும் மஞ்சள் தூளானது அத்தோடு நிறுத்தி விடாமல் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படும் இந்த மஞ்சளை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவத்தில் மிக பெரிய பங்கு வகித்தது. இங்கிலிஷ் மருந்துகள் வந்த உடன் இதன் பயன்பாட்டை குறைத்த நாம் இதன் மருத்துவ குணங்களை பெரிதும் கண்டுகொள்வதில்லை. ஆனால், நாம் தினமும் தேவையான அளவில் மஞ்சள் எடுத்துக்கொண்டாலே பல உடல் பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துவதற்கு அடித்தளமாக அமையும் மஞ்சள், பூண்டு வகைச் சார்ந்தது. பல வகைகளில் உதவும் இந்த மஞ்சளை தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு பாலில் கலந்து குடித்தால் பல பயன்களை கொடுக்கும். அப்படி பாலில் கலக்கி குடிக்கும் பொழுது நமக்கான நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகி கெட்ட வைரஸ் மற்றும் பாக்டீரியாவை அளிக்கும். அத்துடன் நிறுத்திவிடாமல் தோல், சிறுகுடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்கள் ‘நம் உடம்பினுள் பாதிக்காத வகையில் நம்மை பாதுகாக்கும். ஏற்கனவே புற்றுநோய் இருப்பவர்களுக்கும் அதன் செல்களை வளர விடாமல் தடுக்கும்.
சளி இருமல் தொண்டைவலி என பல பிரச்சனைகளை தீர்க்கும். இப்பொழுது கூட தொண்டையில் ஏதாவது பிரச்சனை என்றால் நம் வீட்டின் பெரியோர்கள் பாலில் மஞ்சள் தூளை கலந்து தான் நமக்கு கொடுக்கின்றனர். ஆண்டி பையோட்டிக்ஸாக பயன்படுத்தப்படும் இந்த மஞ்சள் கீழ் வாதத்தை போக்குவதோடு சைனஸ் பிரச்னையையும் தீர்க்கும்.
ஏற்கனவே கால்சியம் சத்து அதிகம் கொண்ட பாலில் இந்த மஞ்சள் தூளை கலந்து பருகினால் எலும்பு மற்றும் தசை சம்பந்தமான பிரச்சனைகள் தீரும் மேலும் எலும்பின் பலத்தையும் அதிக படுத்தும். பாலுடன் கலந்த மஞ்சளை தினமும் குடித்து வந்தால் சருமம் பொலிவூட்டும் தோல் பிரச்சனைகளுக்கு மஞ்சள் தடவினால் விரைவில் சருமம் மேம்படும்.
ரத்தநாளத்தை சுத்தகரிக்கப்பட்டு அதில் உள்ளே நச்சுக்களை வெளியேற்றுகிறது மேலும் ஹார்மோன் குறைபாடுகளை சரி செய்ய உதவுகிறது. செரிமான மற்றும் தலைவலி பிரச்சனைகளை தீர்க்கும் இந்த மஞ்சள் பெண்களின் மாதவிடாய் வலியையும் குறைக்கின்றது.
இது போன்ற பல நன்மைகளை கொண்டது மஞ்சள். அதனால் அளவுடன் பருகினால் அளவில்லாத பயன்கள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க வளமுடன்!