தளபதி நடித்த ஷாஜகான் திரைப்படத்தில் நடித்தவர் ரிச்சா பல்லோட். பெங்களூரில் பிறந்த இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடா ஹிந்தி என பல மொழிகளில் நடித்துள்ளார். ௧௯௯௧ ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக லாஹீ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் தற்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா? அவரது சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!!
1980 ஆகஸ்ட் மாதம் 30- ம் தேதி பிறந்த இவர் தமிழ் சினிமாவில் ஆர். பி. சௌத்ரி தயாரிப்பில் ரவி அப்புழு இயக்கத்தில் 2001 ம் ஆண்டு வெளிவந்த ஷாஜகான் திரைப்படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே பெரும் பெயரையும் புகழையும் பெற்ற ரிச்சா பல்லோட் அடுத்த ஆண்டு நடிகர் பாரதி ராஜாவுடன் அல்லி அர்ஜுனா என்ற திரைப்படத்தில் நடித்தார்.
அதில் பெரும் வரவேற்பு கிடைக்காத நிலையில் மத்த மொழிகளில் வாய்ப்புகளை தேடி சென்ற ரிச்சா பல்லோட் மூன்று வருடங்கள் கழித்து ஜெயம் ரவி நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கத்தில் வெளிவந்த “உனக்கும் எனக்கும்” என்ற வெற்றித் திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக நடித்திருந்தார். அதன் பின்னர் நடிப்பில் பெரிதாக ஈடுபாடு காட்டாது சினிமாவை விட்டு விலகினார். இவர் கடைசியாக தமிழில் தோன்றியது “யாகாவாராயினும் நா காக்க” என்ற 2015- ம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தில் அதுவும் துணை கதாபத்திரமாக.
ஹிமான்ஷு என்பவரை திருமணம் செய்த இவர் தற்பொழுது வெளிநாடுகளில் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் மகன் ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கது. என்ன தான் இவருக்கு திருமணமாகி 5 வயதில் மகன் இருந்தாலும் அழகிய சிரிப்பு துரு துருவேனா, எப்படி ஷாஜகான் திரைப்படத்தில் இருந்தாரோ அப்படியே தான் இப்பொழுதும் தோற்றம் அளிக்கிறார். 40 வயதாகியும் 20 வயது போல், சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக