தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களில் காமெடி செய்யும் சிலரில் கோவை சரளாவும் ஒன்று. காமெடியில் ஜொலித்த மனோரமா-விற்கு அடுத்து பெரிய பெண் காமெடியன் என்றல் கோவை சரளா தான். ஆண் காமெடி கதாபாத்திரங்களுக்கு நிகராக காமெடி யில் கலக்கும் கோவை சரளாவின் நிஜ வாழ்க்கையை பற்றி நீங்க அறிந்ததுண்டா? அவரது குடும்பம் மற்றும் தற்போதைய நிலையை பற்றி விரிவாக்கமாக!
1962-ம் ஆண்டு பிறந்த கோவை சரளா தன் குழந்தை பருவம் முதலே சினிமாவில் நடிப்பதில் கொல்லை ஆசை கொண்டிருந்தார். தன் தந்தை மற்றும் சகோதரிகளின் உதவியால் சினிமாவில் நுழைந்த கோவை சரளா தான் 9-ம் வகுப்பு படிக்கும் பொழுதே “வெள்ளி ரதம்” என்ற திரைப்படம் மூலம் குழந்தை கதாபாத்திரத்தில் தோன்றினார். அதன் பின் 10-வது படிக்கும் பொழுது 32 வயது கர்ப்பிணி பெண்ணாக “முந்தானை முடிச்சு” திரைப்படத்தில் நடித்ததை கண்டு இயக்குனர்கள் பலரும் அவருக்கு வாய்ப்பளிக்க ஆரம்பித்தனர்.
30 வருடங்களுக்கு மேல் 4 தென் இந்திய மொழிகளில் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த கோவை சரளா தமிழில் ஜப்பானில் கல்யாணராமன், ராஜா சின்ன ரோஜா, வரவு எட்டணா செலவு பத்தன, தில்லு முள்ளு, சாதி லீலாவதி, விரலுக்கேத்த வீக்கம், கரகாட்டக்காரன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, அரண்மனை போன்ற படங்களில் நடித்து காமெடியில் கலக்கி உள்ளார்.
2008-ற்கு பின் பெரிதளவில் பட வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் 2013-யில் காஞ்சனா திரைப்படம் மூலம் கம் பேக் கொடுத்து இப்பொழுது சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இவர் தற்பொழுது கமல் ஹாசனின் அரசியல் கட்சியான மக்கள் நீதி மையத்தில் சேர்த்து மக்களுக்கு சேவை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை சரளாவின் குடும்பத்தை பற்றி கூறுகையில் இவருக்கு நான்கு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். ஒரு சகோதரன் அல்லது சகோதரியையே மேனேஜ் செய்ய முடியாத இந்த கால கட்டத்தில் கோவை சரளா தன் உடன் பிறந்த அனைவருடனும் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கெல்லாம் வருமானம் வந்த உடன் திருமணம் செய்து வைத்து அழகு பார்த்த கோவை சரளா தான் திருமணமே செய்து கொள்ளவில்லை. தன் சகோதரி மற்றும் சகோதரன் குழந்தைகளை தன குழந்தையாக நினைத்து வளர்த்து வருகிறார்.
இவரது பாசமானது தன் குடும்பத்துடன் மட்டும் நின்று விடாமல் ஏழை குழந்தைகளுக்கும் வாரி தருகிறார். கோயம்பத்தூரில் பல ஏழை குழந்தைகளை படிக்க வைக்கும் இவர் அவ்வப்பொழுது முதியோர் இல்லங்களுக்கு சென்று உதவி செய்து பணியாற்றி வருகிறார்.