Richard rishi ajith relations

2020-யில் மக்கள் மற்றும் பெண்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் திரெளபதி. கொரோனா ஊரடங்குவிற்கு முன்னரே வெளியான இத்திரைப்படம் சில சர்ச்சைகைளில் சிக்கினாலும் படம் வெளிவந்த பின் அதன் உள் அர்த்தத்தை புரிந்து ரசிகர்கள் பலரும் பாராட்டினார். இப்படிப்பட்ட படங்களில் நடித்தால் இமேஜ் போகிவிடும் என்று நினைத்து நடிக்க மறுத்த பலரின் மத்தியில் தைரியமாக நடிக்க முன் வந்த நடிகர் யார் தெரியுமா? அவருக்கும் பிரபல நடிகர் அஜித்துக்கும் என்ன தொடர்பேன கீழ் பத்தியில்!

கேரளாவில் பிறந்த ரிச்சர்ட் ரிஷி என்பவர்தான் இத்திரைப்படத்தின் கதாநாயகன். கேரளாவில் பிறந்த சில நாளிலே சென்னைக்கு குடியேறிய ரிஷியின் தந்தை தன் மூன்று குழந்தைகளையும் சினிமாவில் ஈடுபடுத்தினார். அஞ்சலி திரைப்படம் மூலம் குழந்தை கதாபாத்திரமாக அறிமுகமான ரிச்சர்ட் ரிஷி அதன்பின் நடிகராக தமிழ் சினிமாவில் விறல் விட்டு என்னும் படியே நடித்துள்ளார். கிட்டத்தட்ட 15 திரைப்படங்களில் தோன்றிய ரிஷி ரிச்சர்ட் மற்ற திரைப்படங்களை விட திரெளபதி படத்தில் பெரும் பெயரையும் புகழையும் சம்பாரித்துள்ளார். இவர் தற்பொழுது “பரமபதம் விளையாட்டு” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவரது இரண்டு சகோதரிகளான ஷாலினி மற்றும் ஷாமிலியும் நடிகர்கள் தான். ஷாலினி அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே போன்ற படங்களிலும் இளைய சகோதரி ஷாமிலி வீர சிவாஜி என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். முத்த சகோதரி தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் அஜித் அவர்களை திருமணம் செய்துள்ளார். ஷாமிலி தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் அருண் பவார் என்பவரையும் திருமணம் செய்துள்ளார்.

ரிச்சர்ட் ரிஷி ஷாலினியுடைய கூட பிறந்த அண்ணன் என்பதால் இவர் தல அஜித் அவர்களுக்கு மச்சனன் உறவாகிறார். அஜித் மச்சனன் இது போன்ற சமூக கருத்து திரைப்படத்தில் நடித்துள்ளது அஜித் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இவரது படங்களை இனி ரசிகர்களால் கவனிக்கப்படும் என்பதும் உறுதி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here