தமிழ் சினிமாவை பொருத்தவரை காமெடியில் இவருக்கு இணை எவருமில்லை என்றே கூற வேண்டும். நெட்டிஸின்களுக்கு மிக பெரிய நண்பனாக அமையும் வைகைப்புயல் வடிவேலுவின் டெம்ப்ளட்ஸ் வைத்து மீம்ஸ் உருவாக்கி மக்களை அவர்களது துயரத்தில் இருந்து மீட்க உதவுகின்றனர். அந்த வகையில் வைகைப்புயல் வடிவேலு நடித்த கதாபாத்திரங்களின் சிறுவயது புகைப்படங்களை உருவாக்கி தற்பொழுது ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

சமீபத்தில் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவது பேஸ்-ஆப் என்ற செயலி தான். உங்களுக்கு எத்தனை வயதாகி இருந்தாலும் அந்த வயதினை குறைத்து நமது குழந்தை புகைப்படத்தை காட்டுவது தான் இந்த செயலியின் சிறப்பம்சம். இந்த செயலியை ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் உபயோகித்து வரும் நிலையில், நெட்டிசன்களும் இதை விட்டு வைக்க வில்லை.

Vadivelu

முதலில் தங்கள் புகைப்படங்களை வைத்து கலாய்க்க ஆரம்பித்த நெட்டிஸின்கள் அதன் பின் தங்களது நண்பர்கள் அதன் பின் உறவினர்கள் கடைசியாக வடிவேலு அவர்களையும் தாக்கி உள்ளனர். வடிவேலு நடித்து மக்களின் மனதில் பதிந்த கதாபாத்திரங்கள் புகைப்படங்களை தான் சிறு வயதிற்கு மாற்றி தற்பொழுது பகிர்ந்து வருகின்றனர்.

வைகை புயல் வடிவேலு தனது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற படி தன் முக பாவனங்களை மாற்றுவது போல் இந்த பேஸ் ஆப்பிலும் அவரது சிறுவயது அப்படியே சித்தரிக்கப்பட்டுள்ளது. இதனை விரும்பு பலரும் இந்த புகைப்படங்களை வைரலாக்கி சிரித்து வருகின்றனர். அப்படி உற்சாகத்தை உண்டாக்கும் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக
Vadivelu Faceapp

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here