பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா விஜயகுமார் எப்பொழுதும் எதாவது ஒரு காரியத்தை செய்து ட்ரெண்ட் ஆவர். அப்படி சில நாட்களாக ட்ரெண்டில் இருந்து ஓரங்கட்டி இருந்த வனிதா தற்பொழுது மீண்டும் ட்ரெண்ட் ஆகி வருகிறார். அதற்கு காரணம் அவர் ஆசையாக திருமணம் செய்து கொண்ட மூன்றாவது கணவர் பீட்டர் பால் தான். அவரை வனிதா வீட்டை விட்டு விரட்டி உள்ளதாக பிரபல தயாரிப்பாளர் செய்தியை வெளியிட்டுள்ளார்.
தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பொழுது தனது அதிகார பேச்சால் தினமும் ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வந்த விஜயகுமார் வெளியில் வந்தும் அந்த மவுசு குறையாமல் பீட்டர் பால் என்பவரை முன்னாள் மனைவியுடன் விவாகரத்துக்கு முன்னே திருமணம் செய்தார். இதனால் சர்ச்சையில் சிக்கிய வனிதா மட்டும் பீட்டர் பாலை சினிமா பிரபலங்கள் உட்பட ரசிகர்கள் பலரும் விமர்சித்து வந்தனர்.
அந்த ஆயிரக்கணக்கோரில் வனிதாவுக்கு சிக்கிய பலியாடு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி புகழ் லட்சுமி அவர்கள் தான். இந்த சண்டை எல்லாம் கண்டு பொழுதை போக்கி வந்த ரசிகர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக வணிதாவிடம் இருந்து எந்த விதமான கன்டென்ட்யும் வரவில்லை. ஆனால் அவரோ கோவாவில் தன் கணவருடன் ஜோலியாக பிறந்தநாளை கொண்டாடி வந்தார்.
இதனால் பெரிதும் ஏமாற்றம் அடைந்த ரசிகர்களுக்கு தற்பொழுது வனிதாவை பற்றின ஒரு சூடான செய்தி வெளியாகியுள்ளது. இயக்குனர் ரவீந்தர் அவர்கள் பீட்டர் பால் வனிதாவுக்கு திருமணம் ஆனா நாள் முதலே அவர்களது திருமணத்தை எதிர்த்தும் பீட்டர் பால் முன்னாள் மனைவிக்கு உதவி வந்த நிலையில் தற்பொழுது வனிதா பீட்டர் பாலை வீட்டை விட்டு விரட்டிய செய்தியை உறுதி செய்துள்ளார்.
பீட்டர் பால் மற்றும் வனிதா கோவா சென்றிருந்த பொழுது அதிகம் மது உட்கொண்ட பீட்டர் பால் நிலை தடுமாறி வனிதாவை தாக்க முயன்றுள்ளார் அதன்பன் சமாதானமாகி சென்னை வரை போதையில் வாகனத்தை இயக்கி வந்த பீட்டர் பாலை வீட்டில் இருந்து விரட்டி விட்டதாக வதந்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. அதை ரவீந்தர் உறுதி செய்துள்ளார். சென்னைக்கு வந்த பின் வனிதாவும் அவரது குடும்பத்திரனும் அவரை தாக்கி வீட்டை விட்டு விரட்டியுள்ளனராம்.
இச்சம்பவம் பல இடங்களிலும் பரவி வரும் நிலையில் இதை கண்ட ரசிகர்கள் “பலரது சாபமும் பழித்து விட்டது” என்று கூறி வருகின்றனர். பிரபல நடிகர் விஜயகுமார் மகளான வனிதா அவரது தந்தையுடனும் சண்டை போட்டுக்கொண்டு ஆண் துணையின்றி தனியாக வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.