தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றவர் நயன்தாரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கும் நயன்தாரா பல கஷ்டங்கள் மற்றும் தோல்விகளுக்கு பின்னர் உயர்ந்து தற்பொழுது யாரும் நெருங்க முடியாத அளவில் உச்சத்தில் இருக்கின்றார். அப்படிப்பட்ட நடிகையும் பிரபல இயக்குனரும் ஏன் ஒன்றாக பணியாற்றவில்லை என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.
ஒரு நடிகர், நடிகை அல்லது துணை கதாபாத்திரங்களில் நடிப்பவர்களுக்கு முதல் திரைப்படத்தின் வெற்றி மிகவும் தேவையான ஒன்று. முதலிலேயே தோல்வியை அடைந்து விட்டால் அனைவரும் ஒதுக்கி விடுவர் என்பது எல்லா துறைகளிலும் நடக்கும் பொதுவான ஒன்று. அதன்பின் கடுமையான உழைப்பிற்கு பின்பு தான் மீண்டும் வெற்றியடைய முடியும். ஆனால் இயக்குனர் ஹரி நயன்தாராக்கு அந்த சுமையை கொடுக்காமல் முதல் படத்தையே வெற்றி படமாக அமைத்து தந்தார்.
ரௌடிசம், அரசியல், போலீஸ் என அடிதடியாக திரைப்படங்களை எடுப்பதில் வல்லவர் ஹரி. சூர்யா நடித்த சிங்கம் திரைப்படம் இதற்கு சான்று. தன்னுடன் பணியாற்றிய கலைஞர்களையே அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டவர். அப்படி இருக்கையில் தான் அறிமுகம் செய்தவர் அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாராவும் ஹரியும் ஏன் சேர்ந்து பணியாற்றவே இல்லை என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு.
இதற்கு காரணம் சிங்கம் 2 திரைப்படம் தான். தனது திரைப்படங்களில் மசாலாவுக்கும் பஞ்சமே வைக்காத ஹரி சிங்கம் 1 வெற்றிக்கு பின் 2013 ம் ஆண்டு வெளிவந்த சிங்கம் 2 திரைப்படத்தின் குத்து பாடல் ஒன்றுக்கு ஆட நயன்தாராவை ஹரி அணுகியுள்ளார். அதற்கு நான் குத்து பாடல்கள் எல்லாம் ஆடுவதில்லை என்று கூறி நயன்தாரா மறுத்ததால் இருவருக்கும் தில்லு முள்ளு ஏற்பட்டுள்ளது.
அந்த வாக்குவாதம் மூலம் இருவருக்கு விரிசல் ஏற்பட்டதால் அதன் பின் இருவரும் சேர்ந்து பணியாற்றவே இல்லை. தற்பொழுது கிளமர் கதாபாத்திரத்திலும் நடிக்கும் நயன்தாரா அதற்கு முன்பும் விஜய் ரஜினி போன்றவர்களின் திரைப்படத்தில் குத்து பாடல் ஆடிய நிலையில் நான் கூப்பிட்டு நயன்தாரா வரவில்லை என்ற மனஸ்தாபம் ஹரி மனதில் தோன்றியது. தன்னை அறிமுகம் செய்த இயக்குனரின் அழைப்பிற்கு நயன்தாரா ஒத்துழைத்திருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் பேசி வருகின்றனர். எது எப்படியோ! ஹரி நயன்தாராவை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளார்.