2007 ஆம் ஆண்டு சோட்ட மும்பை என்னும் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை அனிகா.

இவர் தமிழில் என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை குட்டி அனிகா சுரேந்திரன்.

மலையாள சினிமாவில் அடுத்தடுத்து நடித்து வரும் அணிகா தமிழிலும் கவனம் செலுத்தி வருகிறார்.தமிழ் மொழியில் கௌதம் மேனன் இயக்ககத்தில் திரிஷா,அஜித் மகளாக நடித்து அனைவரையும் ஈர்த்த அணிகா.நானும் ரவுடி தான்,பாஸ்கர் தி ராஸ்கல்,மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அதன் பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் படத்தில் அஜித் – நயன்தாரா மகளாக நடித்து அனைவரையும் கவர்ந்து வந்த அணிகா தனது 14 வயதில் போட்டோஹூட் பக்கம் திரும்பினார்.

தெலுங்கு,மலையாளம் என இரண்டிலும் நடித்து வருகிறார்.தற்போது தமிழில் பீ டி சார், வாசுவின் கர்ப்பிணிகள்,D50 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

18 வயதில் ஹீரோயினாக கடந்த 2022 ஆம் ஆண்டு புட்ட பொம்மா என்னும் தெலுங்கு படத்தில் சத்யா என்னும் ரோலில் நடித்து இருப்பார்.

அதே போன்று மலையாளத்தில் ஓ மை டார்லிங் கில் ஜெனி & ஜாஸ்மின் என்னும் ரோலில் நடித்து இருப்பார்.

இந்நிலையில் அணிகா அவர்கள் 19 வயதினை எட்டி இருக்கிறார்.அச்சு அசலாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா லுக்கில் மாறி போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here