தலைவர் ரஜினிகாந்தும் சரி, நடிகர் சத்திய ராஜும் சரி 90-களில் மிகவும் பேசப்பட்ட நடிகர்கள். தமிழ் சினிமாவில் இரண்டு பிரபல ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது வழக்கமான ஒன்று ரசிகர்களும் அதைத்தான் விரும்புகின்றனர். ராஜினிகாந்த் ஹீரோவாக நடிப்பதில் கைதேர்ந்தவர் சத்யராஜ் வில்லனாக நடிப்பதில் வல்லவர். இவர்கள் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்த படங்களும் உண்டு. அப்படி வில்லனாக கூட நடித்த நீங்கள் ஏன் உதவி கதாபாத்திரங்களில் நடிக்க யோசிக்கிறீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு சத்யராஜ் பதிலளித்துள்ளார்.
ராஜா ராணி தந்தை கதாபாத்திரம் முதல் பாகுபலி கட்டப்பா வரை பல கதாபாத்திரங்களில் நம் மனதை தொடும் வகையில் நடித்து அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை ஏற்கனவே நிரூபித்து காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் சினிமா வழக்கையை வில்லன் கதாபாத்திரங்களில் ஆரம்பித்த சத்திய ராஜ் அவர்கள் போக போக தன் திறமைகளை வெளிப்படுத்தி ஒரு அக்சன் ஹீரோவாக மாறினார். அதன் பின் ரொமான்சிலும் கலக்கிய சத்யராஜ் 90’ஸ் களில் குஷ்பூ மீனா போன்ற நடிகைகளுடன் திரைப்படத்தில் ஒரு காதல் மன்னனாக தென்பட்டார்.
இருப்பினும், ரஜினிகாந்த் கமல் ஹாசன் போன்ற பிரபலங்கள் அளவுக்கு ரசிகர் படையை கொள்ளாத இவர் ‘விஜய், அஜித், விக்ரம் போன்ற இளம் நடிகர்கள் 2000-களில் தமிழ் சினிமாவில் நுழைய ஆரம்பித்த பின்பு பின்வாங்கி உதவி கதாபாத்திரங்களில் தோன்ற ஆரம்பித்தார். அதிலும் தன் திறமையை வெளிப்படுத்திய சத்யராஜ் அவர்கள் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பார் என்ற பெயரை பெற்றார்.
பல முன்னணி நடிகருடன் உதவி கதாபாத்திரத்தில் நடித்த நீங்கள் ஏன் அவருடன் நடிக்க யோசிக்கிறீர்கள் என்ற கேட்ட வேளையில் அவர் கூறியது “நானும் ரஜினிகாந்த் அவர்களுக்கு மிஸ்டர்.பரத் திரைப்படத்தில் தந்தை மகனாக நடித்தது மிகவும் பேசப்பட்ட கதாபாத்திரம், அப்படி ஒரு கதாபத்திரத்தில் நடித்துவிட்டு ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தால் ரசிகர்களால் ஏற்று கொள்ள முடியாது! சிவாஜியில் என்ன தேர்தெடுக்கப்பட்ட கதாபாத்திரம் மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாது அதே போல் எந்திரன் திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திர கதை என்ன ஈர்க்கவில்லை அதனால் மறுத்துவிட்டேன்.” என்று கூறினார்.
அதே பேட்டியில் மணி ரத்னம் கதையில் ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் நடிப்பதாக கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த திரைப்படத்தினை பற்றி எந்த ஒரு செய்தியும் வெளிவரவில்லை.