கல்பாத்தி குடும்பம் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான காதல் கதை திரைப்படம் “அனேகன்” ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றிய தனுஷ் மற்றும் அமிரா டஸ்டுர் இப்படத்தில் 3-ற்கும் மேற்பட்ட பிளாஷ்பாக் கதைகளில் தோன்றியிருப்பனர்.
மூன்று தலைமுறைகளாக காதல் செய்து சேராத ஜோடி 4-வது தலைக்காட்டில் ஜோடி சேருமா என்பது தான் இத்திரைப்படத்தின் கதை. நவரச நாயகன் கார்த்திக் ஆஷிஷ் வித்யார்த்தி ஜெகன் ஒன்றை பல பிரபலங்கள் துணை கதாபாத்திரங்களில் தோன்றி இருந்த நிலையில் தனுஷ் மற்றும் அமிரா டஸ்டுர் விற்கு சிறப்பு பாராட்டுகள் கிடைத்தது.
மும்பையில் பிறந்த அமிரா டஸ்டுராவிற்கு “அனேகன்” திரைப்படம் தமிழில் முதல் படம் என்றாலும் அவருக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 2013-ம் ஆண்டு இந்திய சினிமாவில் ஹிந்தி திரைப்படம் மூலம் அறிமுகமான அமிராவிற்கு 2015-ம் ஆண்டு வெளியான அனேகன் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது. அதன் பின் பல மொழிகளில் பிரபலனமான அமிரா தெலுங்கு, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் டேபுட் செய்தார்.
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கிய அமிரா தற்பொழுது அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்தால் அவர் முழு நேர ஹாலிவுட் நடிகையாகவே மாறி விட்டார் என்ற எண்ணம் ரசிகர்களின் மத்தியில் தோன்றுகிறது. சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தும் அமிரா இந்த லாக்டவுன் காலங்களில் கலங்கி போயிருந்த ரசிகர்களுக்கு குஷியை தரும் வகையில் அமைந்தது. அப்புகைப்படங்கள் கீழ் கண்டவற்றில்!