தமிழ் சினிமாவில் பல பாடகர்களுக்கு வாய்ப்பளிக்கும் தளமாக அமையும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் வாழ்க்கை பயணத்தில் திருப்புமுனைகள் கண்ட பாடகர்கள் பல. அப்படி சூப்பர் சிங்கர் மூலம் தன் வாழ்க்கை துணையை கண்டுபிடித்த சூப்பர் சிங்கர் விக்ரம் அவர்களின் திருமணம் நேற்று உறவினர்கள் மத்தியில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இதற்கு பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
2007-ம் ஆண்டு தொடங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சிங்கர் சீசன் 7 யில் பைனல்ஸ் வரை சென்ற விக்ரம் கடந்த டிசம்பர் மாதம் தனது நிச்சயதாரத்தை பற்றி தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அதில் அதில் சூப்பர் சிங்கர் சிவாங்கி நடுவர் அனுராதா போன்றவர்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இந்த ஊரடங்கின் பொழுது தற்காலிகமாக
சூப்பர் சிங்கர் சிங்கர் சாம்பியன் ஆப் சாம்பியன் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த விக்ரம் காதல் சுற்றின் பொழுது அவரது வருங்கால மனைவியை மக்களிடம் அறிமுகம் செய்தார். அதில் தங்கள் காதல் அனுபவங்களை பற்றி மனம் திறந்த விக்ரம் மற்றும் சுபா அவர்களது முதல் சந்திப்பை பற்றியும் கூறி இருந்தனர்.
அதை பற்றி சுபா கூறுகையில் “நான் முதன் முதலாக விக்ரமை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தான் பார்த்தேன்! அவரது வாழ்க்கையை பற்றின காணொளியை சூப்பர் சிங்கரில் ஒளியேற்றிய பொழுது அவரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் நான் அவரிடம் என் காதலை பற்றி மெசேஜ் செய்தேன்! அதை பார்த்த அவரும் என்னை மீட் செய்ய ஒத்துக் கொண்டார். நண்பர்களாக பேச ஆரம்பித்தோம் காதலில் முடிந்தது” எனக் கூறினார்.
30 வயதாகும் விக்ரம் சுபாவுடன் நிச்சயமாகி இருந்த நிலையில் சீக்கிரமே திருமணம் நடக்கும் என்று எதிர் பார்த்த நிலையில் ஊரடங்கால் தாமதமான திருமணம் நேற்று காலை நெருங்கிய சொந்த பந்தங்களுடன் சிறப்பாக நடந்து முடிந்தது. இதற்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து சிறப்பித்து வருகின்றனர்.
View this post on Instagram
Beginning of my life journey with my better half, to be honest my Best Half❤️❤️❤️