80 மற்றும் 90 களில் கலக்கிய நடிகர்களின் காலம் முடிந்து தற்பொழுது அவர்களது வாரிசுகள் தமிழ் சினிமாவில் கலக்கி வருகின்றனர். அப்படி தமிழ் சினிமாவில் ௨௦௦ ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நாசர் அவர்களின் இரண்டாவது மகன் சினிமாவில் நடிப்பது உறுதியாகி உள்ளது.

தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதியான கம்மீல என்பவரை திருமணம் செய்துகொண்ட நாசர் அவர்களுக்கு அப்துல் ஆசான் பாய்சல் லுத்துபுதீன் அபி ஹாசன் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். நாசரின் முதல் மகனான அப்துல் ஆசான் பாய்சல் ஏற்கனவே சிவா இயக்கத்தில் படம் ஒன்று நடிக இருந்த நிலையில் எதிர்பாரா விதமாக விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார்.

Naasar Family

அதன் பின் பாய்சலின் என்ட்ரி இதுவரை நடக்காத நிலையில் நாசரின் இரண்டாவது மகன் லுத்துபுதீன் 2014-ம் ஆண்டு வெளியான சைவம் திரைப்படம் மூலம் அறிமுகமானதை தொடர்ந்து நாசரின் மூன்றாவது மகன் அபி ஹாசன் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கவுள்ளார். அபி ஏற்கனவே நாசர் இயக்கி 2012-ம் ஆண்டு வெளிவந்த சுன் சுன் தாத்தா திரைப்படத்தில் குழந்தை கதாபாத்திரமாக நடித்துள்ளதுள்ளது குறிபிடத்தக்கது.

அது மட்டுமின்றி சமீபத்தில் விக்ரம் நடித்த கடாரம் கொண்டான் திரைப்படத்தில் நடிகர் கமல் ஹாசன் இளையமகள் அக்சராவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் தாரமே தாரமே பாடல் மிகப் பெரிய வைரலானது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து அபி ஹாசன் கேபிள் சங்கர் இயக்கத்தில் திருக்குமரன் தயாரிப்பில் பெயர் சூட்டா திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது உறுதியாகி உள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Abi Haasan in Kadaram Kondan

Abi Haasan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here