நிவேதா தாமஸ்

பல நடிகைகள் கிளாமர் காட்டியும் அவர்கள் எதிர்பார்க்கும் மார்க்கெட் கிடைக்காத இந்த காலத்தில் சில நடிகைகள் மட்டும் தங்கள் சிரிப்பால் மட்டுமே ரசிகர்களை சிதறடிக்க வைக்கின்றனர். அந்த வரிசையில் வளர்ந்து வரும் நடிகை நிவேதா தாமஸ் அவர்களும் ஒன்று. சமீபத்தில் சிரிப்பழகி நிவேதா தாமஸ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

கேரளாவில் பிறந்த நிவேதா தாமஸ் விஜய் நடித்த குருவி போன்ற திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரமாக நடித்து வந்த நிலையில் 2011-ம் ஆண்டு பிரணயம் என்ற மலையாள திரைப்படம் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே ஆண்டில் போராளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிவேதா தாமஸ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

Nivetha Thomas

சந்துரு இயக்கத்தில் ஜெய் நடித்த நவீன சரஸ்வதி திரைப்படத்தில் கதாநாயகியாக தோற்றமளித்த நிவேதா தாமஸ் ஜில்லா பாபநாசம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரமாக தோற்றமளித்த இவர் 2015- ற்கு பின்னர் தமிழ் மலையாள படங்களை தவிர்த்து தெலுங்கு திரைப்படங்களில் பிஸி ஆனார். இவர் 2015-ம் ஆண்டு நானி நடித்த ஜென்டில்மென் என்ற திரைப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

விஜய் கமல் ரஜினிகாந்த் போன்ற பல பிரபலங்களுடன் நடித்துள்ள நிவேதா தாமஸ் அவர்கள் இந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக கருதப்படுகிறார். இவர் 2020-யில் ரஜினிகாந்தின் மகளாக தர்பார் திரைப்படத்தில் நடித்தது தமிழ் சினிமாவில் ஒரு நல்ல கம் பேக்காக அமைந்தது. அந்த வெற்றியை வைத்து நிவேதா தாமஸ் இன்னும் தமிழில் பல படங்கள் நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

இவர் தமிழில் 5-ற்கும் குறைவான திரைப்படங்கள் நடித்திருந்தாலும் இவருக்கு தமிழில் உள்ள ரசிகர் கூட்டம் மிகவும் அதிகம். அவர் சமீபத்தில் வெளியிட்டிருந்த புகைப்படம் ஒன்றிற்கு ரசிகர் ஒருவர் உனக்கு கிளாமர் எல்லாம் தேவ இல்லமா சிரிச்சலே போதும் சிக்காத மீனு கூட சிக்கிக்கும் என போட்டிருந்த விமர்சனம் பலராலும் கவனிக்கப் பட்டது. அதும் உண்மை தான் எனவும் சில ரசிகர்கள் ஒத்துக்கொள்கின்றனர். உங்கள் கருத்தையும் மறக்காமல் தெரிவிக்கவும்.

Nivetha Thomas Photos Nivetha Thomas Photos Nivetha Thomas Photos Nivetha Thomas Photos Nivetha Thomas Photos Nivetha Thomas Photos
Nivetha Thomas Nivetha Thomas Photos

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here