Anasuya Bharadwaj Dance video

திரைப்படங்களிலும் சரி நிஜ வாழ்க்கையிலும் சரி நடனமென்பது ரசிகர்களின் பொழுது போக்குக்கு முக்கியமான ஒன்று. அதிலும் மசாலா பாடல்கள் என்றால் இளைஞர்களுக்கு ஒரு தனி வகையான குஷி தான் அப்படி திரைப்படங்கள் மசாலா பாடல்கள் தோற்று போகும் வகையில் தெலுங்கு தொலைக்காட்சி தொகுப்பாளினி நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

ஆந்திராவில் பிறந்த அனுசுயா பாரட்வாஜ் தான் அந்த காணொளிக்கு சொந்தக்காரர். தன் ஆரம்ப காலத்தில் 2003-ம் ஆண்டு தெலுங்கு சூப்பர்ஸ்டார் என்.டி.ஆர் நடித்த “நாகா” திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்த அனுசுயாவிற்கு அதன் பின் பல திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தாலும் அவர் அந்த வாய்ப்புகளை மறுத்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில் 10 வருடங்கள் கழித்து 2013-ம் ஆண்டு தெலுங்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளராக சேர்ந்தார்.

Anasuya Bharadwaj

தொகுப்பாளராக கலக்கி வந்த அனுசுயா பல தெலுங்கு தொலைக்காட்சிகளில் பிரபலமான பின்னர் 2016-ம் நாகார்ஜூனா மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடித்த திரைப்படத்தில் நடித்தார். அதன் பின் 2018-ம் ஆண்டு சமந்தாவின் ரங்கஸ்தலம் திரைப்படத்தில் இவர் நடித்த கோழி ரங்கம்மா கதாபாத்திரம் இவருக்கு பல விருதுகளையும் பாராட்டையும் பெற்றுத் தந்தது.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பாப்புலராகி வரும் தொகுப்பாளர் அனுசூயா சமீபத்தில் விஜய தசமியை முன்னிட்டு ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்று பக்கா லோக்கல் என்ற பிரபலமான பாடலுக்கு நடனமாடி இருந்தார். அது தற்பொழுது தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்காக!!

இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பது ரசிகர்கள் பலரால் நம்ப முடியாத ஒன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here