சின்னத்திரை பிரபலங்கள் முதல் வெள்ளித்திரை பிரபலங்கள் வரை பலருக்கும் இந்த கொரோனா சமயத்தில் காதும் காதும் வைத்தபடி திருமணம் நடந்து வரும் நிலையில் சூப்பர் சிங்கர் சாய் சரணை தொடர்ந்து சின்னத் திரை நடிகரான ராஜு ஜெயமோகன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதற்கு ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் கல்லூரி காலம் மூலம் கவின் ரியோ ராஜ் போன்றவர்களுடன் சின்னத் திரையில் அறிமுகமான ராஜு முதல் சீரியலிலேயே நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பின் சரவணன் மீனாட்சி ஆண்டாள் அழகர் போன்ற சீரியல்களில் துணை கதாபாத்திரமாக நடித்து வரும் ராஜு தன் காமெடி வசனங்கள் மூலம் ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
சின்னத்திரையில் மட்டுமின்றி சினிமாவிலும் கலக்கி வரும் ராஜு இது வரை இரண்டு படங்களில் நடித்துள்ளார். தன் நண்பன் கவின் நடித்த நட்புனா என்னனு தெரியுமா திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்திலும் ஜெயராம் நடிப்பில் வெளிவந்த துணை முதல்வர் திரைப்படத்திலும் நடித்து சினிமா துறையில் வளர்ந்து வருகிறார்.
வாரம் தோறும் ஞாயிறு மதியங்களில் விஜய் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகும் அந்த வகையில் கடந்த மாதம் செப்டம்பர் 20-ம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் முரட்டு சிங்கிள். யாஷிகா ஆனந்த் ஐஸ்வர்யா டுட்டா சுனிதா என பல பெண் பிரபலங்கள் ஒரு அணியிலும் நாஞ்சில் விஜயன் பாலா தீனா போன்ற காமெடி பிரபலங்கள் ஒரு அணியிலும் பங்கேற்றிருந்த இந்நிகழ்ச்சியில் சீரியல் நடிகர் ராஜுவும் பங்கேற்றிருந்தார்.
அதில் தன்னை முரட்டு சிங்கிள் என்று கூறிக்கொண்டு ராஜுவிற்கு தான் தற்பொழுது தாரிக என்பவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. 29-ம் தேதி மருதமலையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் வைத்து நடந்த இந்த திருமணத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர்.