துபாயில் நடந்து வரும் இந்த ஐபில் சீசனில் தமிழகத்தை சேர்ந்த முருகன் அஸ்வின் நடராஜன் ஜெகதீசன் வருண் சக்கரவர்த்தி என பலரும் நன்றாக திறமைகளை வெளிப்படுத்தி ஜாம்பவான்களின் பாராட்டுகளை பெற்று வருகின்றனர். முதல் 2 சீசன்களில் தோல்வியடைந்த வருண் சக்கரவர்த்தி இந்த சீசனில் சாருக்கான் நிருவாகித்து வரும் கொல்கத்தா அணியினரால் ஏலம் எடுக்கப்பட்டார்.
முன்னணி சுழற் பந்து வீச்சாளர் மற்றும் இந்தியா அணிக்காக விளையாடிய அனுபவம் வாய்ந்த குல்தீப் யாதவ் இடத்தில் விளையாண்ட வருண் சக்கரவர்த்தி தன் முதல் போட்டியின் முதலே நன்றாக விளையாடி அந்த இடத்தை பூர்த்தி செய்ததோடு அந்த இடத்தையும் தனக்கென பதிவு செய்தார். கொல்கத்தா ஆடி வரும் எல்லா போட்டிகளிலும் சிறப்பாக பந்து வீசி வரும் வருண் சக்கரவர்த்தி தமிழகத்தை சேர்ந்த வீரர் என்பது தமிழர்கள் பலருக்கும் பெருமை அளித்தது.
மீடியாவும் அவரது பக்கம் திரும்பிய நிலையில் அவரைப் பற்றி பல உண்மைகள் வெளிவர தொடங்கியது. 2014-ம் ஆண்டு ஜீவா திரைப்படத்தில் உதவி கதாபாத்திரமாக நடித்த செய்தி அண்மையில் ரசிகர்களின் மத்தியில் வைரலானது அதனை தொடர்ந்து தற்பொழுது அவர் கையில் பச்சை குத்தி இருக்கும் டாட்டூ தளபதி விஜய் அவர்களின் “தலைவா” திரைப்பட புகைப்படம் தான் என ரசிகர்கள் பலரும் தெரிவித்திருந்தனர்.
அதை விஜய் உடன் நடித்த பாஸ்கி சமீபத்தில் வருண் சக்கரவர்த்தியை பேட்டியெடுத்த தருணத்தில் கேட்ட பொழுது அது விஜய் அவர்களின் டாட்டூ தான் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் எனவும் அவரை பார்க்க ஏதாவது சான்ஸ் கிடைச்சா சொல்லுங்க சார் எனவும் சிறிதும் தான் ஒரு பேசப்படும் கிரிக்கெட் வீரர் என்ற தலைக்கனம் இல்லாமல் மிகவும் பணிவாக கேட்டிருப்பார். அந்த காணொளி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஆடிய இரண்டு ஆட்டங்களிலும் தோனியின் விக்கெட்டை எடுத்தவர் என்ற பெருமையை படைத்த வருண் சக்ரவர்த்தி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் t20 போட்டியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வருண் சக்ரவர்த்தி பேசிய காணொளி உங்கள் பார்வைக்காக!
காலை வணக்கம் சொந்தங்களே ♥️♥️#Master || @actorvijay ♥️♥️ pic.twitter.com/fKH1xIHERX
— ஷாஜகான் 🇱🇰 (@Judeoff3) October 31, 2020