Varun Chakravarthy in Jeeva Movie

தமிழக கிரிக்கெட் வீரர்கள் சர்வ தேச அளவிலான போட்டிகளில் தேர்ந்தெடுக்காததற்க்கான காரணத்தையும் அதில் உள்ள அரசியலையும் தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய திரைப்படம் தான் 2014-ம் ஆண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஜீவா. இதில் தற்பொழுது ஐபில் போட்டிகளில் கலக்கி வரும் தமிழக வீரர் இருப்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

சுசீந்திரன் தயாரிப்பில் விஷ்ணு விஷால், ஸ்ரீ திவ்யா, சூரி போன்ற பிரபலங்களை கொண்ட இத்திரைப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் லக்ஷ்மன் நாராயண் தமிழக கிரிக்கெட் அணிக்கு விளையாடுவது போல் நடித்திருப்பார். தமிழக ரஞ்சி ட்ரோபிக்கு விளையாடும் இருவரில் விஷ்ணு விஷால் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படுவார் ஆனால் லக்ஷ்மன் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்க படாததால் அவர் மன விரக்தியில் தற்கொலை செய்து கொள்வது போல் படத்தினை சித்தரிக்கப்பட்டிருக்கும்.

இப்படத்தில் பல கிரிக்கெட் காட்சிகள் அமைந்திருக்கும் நிலையில் தற்பொழுது கொல்கத்தா அணியில் கலக்கி வரும் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியும் அத்திரைப்படத்தில் நடித்திருக்கும் வீரர்களில் ஒருவராக நடித்திருப்பார். இதற்கு முன்பு தமிழ் மக்களிடம் அறிமுகமில்லாத வருண் சக்கரவர்த்தியை அப்படத்தில் நடித்ததை யாரும் பெரிதாக கருத்தில் கொள்ளவில்லை. ஆனால் தற்பொழுது அவர் பிரபலமாகி வரும் நிலையில் அந்த திரைப்படமும் 6 ஆண்டுகள் கழித்து மக்களின் மத்தியில் பிரபலமாகிறது. இவரை பார்ப்பதற்காகவே அப்படத்தை திரும்ப பார்க்கும் ரசிகர்களும் உண்டு.

Varun Chakaravarthy

வருண் சக்கரவர்த்தி தற்பொழுது தமிழக அணிக்காக விளையாண்டாலும் அவரது பிறந்த மண் கர்நாடக என்பது குறிப்பிடத்தக்கது. வருண் சக்ரவர்த்தி 2018-ம் பஞ்சாப் அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டு 2019-ம் ஆண்டு தன் முதல் போட்டியில் முதல் ஓவரில் 25 ரன்கள் கொடுத்தார். அதன் பின் பஞ்சாப் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு கொல்கத்தா அணியில் எடுக்கப்பட்டார்.

பிரபல இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் குலதீப் யாதவிற்கு மாறுதலாக வந்த வருண் சக்கரவர்த்தி நன்றாக பந்து வீசி தனக்கான இடத்தை கொல்கத்தா அணியில் பிடித்துள்ளார். மேலும் அவர் ஆஸ்திரேலியாக்கு எதிராக நடக்கவிற்கும் t20 போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Varun Chakaravarthy With Dhoni

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here