பெரும்பாலான தமிழ் மக்களுக்கு பிடித்த ஐ பி எல் அணியான சி எஸ் கே அணிக்கு எதிர்பார்த்த முடிவு அமையாவிட்டாலும் தமிழக வீரர்கள் வெவ்வேறு அணிகளில் கலக்கியது தமிழர்களுக்கு ஒரு விதமான சந்தோசத்தை அளித்தது. கொல்கத்தாவில் வருண் சக்ரவர்த்தி பஞ்சாப்பில் முருகன் அஸ்வின் ஹைதராபாத்தில் நடராஜன் என பல அணிகளில் தமிழக இளைஞர்கள் கலக்கி வந்தனர்.

இதன் மூலம் ஆஸ்திரேலியாக்கு எதிரான t20 போட்டியில் தேர்வான வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக இந்திய அணியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது அதற்கு மாறுதலாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த நடராஜன் இந்தியா அணியில் பந்து வீச்சாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடராஜன்

வேகப் பந்து வீச்சாளரான நடராஜன் ஹைதராபாத்தின் முக்கிய வீரர் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக ஐ பி எல் போட்டிகளில் இருந்து விலகிய பொழுதிலும் நடராஜன் அவரிடத்தில் இருந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். தோனி கோலி எ பி டி வில்லியர்ஸ் போன்ற பல ஜாம்பவான்களின் விக்கெட்களை வீழ்த்தியுள்ள நடராஜன் வருண் சக்ரவர்த்திக்கு பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ஆர் சி பி அணியில் விளையாடும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நடராஜனுக்கு ஒரு பாடல் பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார். படையப்பா திரைப்படத்தில் யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன் ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் மனிதன் என்ற பாடலை பாடி நடரஜனை மகிழ்வித்துள்ளார். இது நடராஜனுக்கு மிகவும் பொருத்தமான பாடல் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

நடராஜன் இந்த சீனில் 16 விக்கெட்டுகள் மற்றும் 60 ற்கும் மேற்பட்ட யோர்க்கர்கள் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நடராஜன் தன் சொந்த ஊரான சேலம் சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் அகாடமி ஒன்று ஆரம்பித்து ௫௦- ௬௦ மாணவர்களுக்கு இலவசமாக கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறார். இவர் உண்மையிலும் மாமனிதர் தான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here