உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 ஆனது 3 வாரங்களை கடந்த 4-காம் வாரம் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இதில் இரண்டாம் வாரத்தில் நடிகை ரேகா வெளியேற்ற பட்ட நிலையில் மூன்றாம் வாரத்தில் பாடகர் ஆஜித்தும் மக்களின் வாக்குகள் குறைவால் எவிக்ட் செய்யப்பட்டார் ஆனால் அவர் வைத்திருந்த பிரி பாஸ் வைத்து அதிலிருந்து தப்பித்தார்.

ஆக 15 போட்டியாளர்களும் ஒரு வைல்ட் வார்ட் என்ட்ரியும் கொண்டு தற்பொழுது இந்நிகழ்ச்சி சூடு பிடித்து வருகின்றது. இந்த வாரம் சக போட்டியாளர்கள் 11 போட்டியாளர்களை நாமினேட் செய்துள்ள நிலையில் இந்த வாரம் யாரிடமும் பிரி பாஸ் இல்லாதலால் கண்டிப்பாக 4-காம் வாரத்தில் ஒருவர் வெளியேற்ற படுவர் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Bigg Boss 4 Contestants

அந்த இடத்தை பூர்த்தி செய்ய #suchileaks புகழ் சுசித்ரா பங்கேற்க உள்ளார் என்ற செய்தி கடந்த இரண்டு வாரங்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அதை உறுதி செய்யும் படியும் சுசித்ரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டு வருகிறார். கணவருடன் விவாகரத்து சினிமா வாழ்க்கையில் பிரச்சனை என்று பல சோதனைகளில் சிக்கிய சுசித்ரா மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்துள்ளது நம் அனைவர்க்கும் அறிந்தவேயே.

சுசித்ராவிற்கு இந்த பிக் பாஸ் ஒரு பெரிய மாறுதலாக அமையும் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் தனிமை படுத்தப்பட்டிருந்த ஹோட்டலில் இருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். அந்த ஹோட்டலில் பொழுதுபோக்குக்காக செப்பாக பணியாற்றி வந்த சுசித்ரா இரவில் தன்னை யாரோ கொல்ல முயல்கின்றனர் என்னை காப்பாற்றுங்கள் என கத்தி கதவை தட்டி உள்ளார்.

11 மணியளவில் தன் அறையை விட்டு வெளியேறிய சுசித்ரா பல மணி நேரம் ஹோட்டலின் வரவேற்பில் அமர்ந்து அமர்ந்து ஓய்வெடுத்துள்ளார். இதனை அறிந்த பிக் பாஸ் நிறுவாகிகள் அவரை சாந்தப்படுத்தி கவுன்சலிங் கொடுத்து வருகின்றனர். ஹோட்டலில் இருந்த மற்ற நபர்களும் தூங்க முடியாமல் தொல்லை செய்த சுசித்ரா இன்னும் பிக் பாஸ் வீட்டில் வந்து எத்தனை பேரை தொல்லை செய்ய போகிறாரோ என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இவரது வருகைக்காக ரசிகர்களும் காத்து கிடக்கின்றனர்.

Suchithra

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here