நெடுஞ்சாலை திரைப்படமானது கொள்ளைக்காரனுக்கும் லாட்ஜ் நடத்திவரும் பெண்ணுக்குமான காதல் கதை. பிக் பாஸ் புகழ் ஆரி மற்றும் ஷிவதா நடிப்பில் கிருஷ்ணா தயாரிப்பில் உருவான இத்திரைப்படம் 2014-ம் ஆண்டு வெளிவந்தது. ரெட் கைன்ட் மூவிஸ் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் ஆரம்பத்தில் மக்களால் கவனிக்கப்படாமல் விட்டாலும் ப் பார்த்தவர்கள் கொடுத்த விமர்சனங்களால் பிரபலமானது.

நடிகர் ஆரி அதற்கு முன்னர் ஆடும் கூத்து, ரெட்டைசுழி, மாலை பொழுதின் மயக்கத்திலேய போன்ற படங்களில் நடித்திருந்தாலும், நெடுஞ்சாலை திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்த ஷிவதாவிற்கு இதுவே தமிழில் முதல் படம். இருந்தாலும் எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் நடித்திருந்த ஷிவதா ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவர் இதுவரை தமிழில் 3 படங்கள் மட்டுமே நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Sshivada

கேரளத்து நடிகைகள் தமிழ் படங்களில் வந்து கலக்குவது போல் தமிழகத்தில் இருந்து மலையாள படங்களில் கலக்கியவர் ஷிவதா. திருச்சிராப்பள்ளியில் 1986-ம் ஆண்டு ஸ்ரீ லேகாவாக பிறந்த இவர் முதலில் மலையாள ஆல்பம் பாடல்களில் தோன்றி 2011-ம் ஆண்டு பாசில் இயக்கத்தில் லிவிங் டுகெதர் என்ற திரைப்படம் மூலம் கேரள மக்களுக்கு அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத ஷிவதா 3 ஆண்டுகளுக்கு பின்னர் 2014-ம் ஆண்டு நெடுஞ்சாலை திரைப்படம் மூலம் அறிமுகமானார். அவர் சிறு வயது முதலே கேரளாவில் வளர்ந்ததால் தமிழில் தடுமாறினாலும் “நான் திருச்சியை சேர்ந்தவள், 5 ம் வகுப்பு வரை நான் தமிழகத்தில் தான் படித்தேன். அதனால், நானே டப் செய்கிறேன்” என்று கூறி நெடுஞ்சாலை திரைப்படத்தில் டப்பிங் செய்தார்.

அதன் பின் 2015-ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஷிவதா தமிழ் மொழிகளில் இடைவேளை விட்டு நடித்து வந்தார் 2017-ற்கு பின்னர் எந்த படத்திலும் தோன்றாத இவர் இந்த ஆண்டு 4 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இந்த 4 படங்களுமே தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமையும் என எதிர் பார்க்கப்படுகிறது. அவரது சில புகைப்படங்கள் உங்க பார்வைக்காக. இவரது கணவர் முரளியும் மலையாள சினிமாவின் நடிகர் மற்றும் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sshivada Sshivada Sshivada Sshivada Sshivada Husband Sshivada Family

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here