இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹிந்தி மொழியில் தான் ஒளிபரபப்பட்டது. அதில் கிடைத்த வெற்றியின் மூலமே பிக் பாஸ்ஸின் நிறுவனர்கள் தென் இந்தியா மொழிகளிலும் வெளியிடலாம் என்ற முடிவினை எடுத்து 2017-ம் ஆண்டு தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகினர்.

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியானது 2006-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கான் தொகுப்பில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் ஹிந்தி சீசன் 14 நிகழ்ச்சி 14 போட்டியாளர்களை கொண்டு அக்டோபர் 3 ம் தேதி கோலாகலமாக ஆரம்பித்தது. இதில் 2 போட்டியாளர்கள் வெளியேற்ற பட்ட நிலையில் 12 போட்டியாளர்களை கொண்டு 4 காம் வாரத்தில் உள்ளது பிக் பாஸ் ஹிந்தி சீசன் 4.

Bigg Boss Hindi

நமது பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் சுரேஷ் அவர்கள் வணக்கம் சொன்னால் எச்சில் தெறிக்கும் என்று சொன்னதுக்கே வீட்டில் மிக பெரிய சண்டை எழுந்தது அது கடைசியில் நவுத்து போன பட்டாசாகவும் மாறியதை நாம் அனைவரும் பார்த்தோம். ஆனால் பிக் பாஸ் ஹிந்தியில் இந்த வாரத்தின் கேப்டன்சி டாஸ்கின் பொழுது கோபமடைந்த பெண் ஒருவர் சகா போட்டியாளரின் மைக்கை பிடிங்கி எச்சிலை காரி துப்பிய ப்ரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் வாய் வார்த்தைகளோடு நிறுத்தி விடுகின்றனர் ஆனால் பிக் பாஸ் ஹிந்தியில் கை கலப்பு ஏற்படும் வரை நிறுத்துவதில்லை. உச்சகட்ட கோபத்திற்கு செல்லும் போட்டியாளர்கள் ஜூஸ்சை சக போட்டியாளரின் முகத்தில் ஊத்துவதையும் கூட நாம் பார்த்திருப்போம். இந்த ப்ரோமோவை கண்ட தமிழ் பிக் பாஸ் ரசிகர்கள் பிக் பாஸ் தமிழும் இது போல் உச்சகட்ட நிலைக்கு சென்றால் பார்ப்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்கும் என தங்களது கருத்தை கூறு வருகின்றனர். அந்த ப்ரோமோ இப்பதிவினில் இணைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here