நடிகர் கமல் ஹாசன் தொகுப்பில் 2017-ம் ஆண்டு தொடங்கிய பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி என்றுமே சுவாரஸ்யத்துக்கு பஞ்சமே இருக்காது. 3 சீன்களை தொடர்ந்து 4-வது சீசன் தொடங்கி வெற்றிகரமாக நடந்து வரும் நிலையில் அதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் நிஜ வாழக்கை உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவர தொடங்கியுள்ளது. அப்படி சம்யுக்தவின் தங்கை யார் என்ற செய்தி தற்பொழுது வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 யின் முதல் நாளில் 16 போட்டியாளர்களின் ஒருவராக வீட்டினுள் நுழைந்த பிரபல மாடல் சம்யுக்த, தாங்கள் கடந்து வந்த பாதை டாஸ்க்கில் தனக்கு ரயான் என்ற மகன் இருப்பதும் சிங்கிள் மதராக அவனை வளர்த்தி வருவதாகவும் கூறி இருந்தார். அவரது குடும்பத்தினரை பற்றி பெரிதாக எதுவும் கூறவில்லை. அவருக்கு தங்கை இருப்பதை பற்றியும் எதுவும் வாய் திறக்கவில்லை.
முதல் வாரத்தில் சக ஹவுஸ்மேட்ஸ் உடன் சகஜமாக பழகாத சம்யுக்தாவை அவர் மிகவும் அமைதியாக இருக்கிறார் என்று போட்டியாளர்கள் அவரை நாமினேட் செய்திருந்த நிலையில் அதில் இருந்து மக்களின் வாக்கின் மூலம் தப்பித்த சம்யுக்த இரண்டாம் வாரத்தில் இருந்து மற்றவர்களுடன் நன்றக பேச ஆரம்பித்தார். பாலா கூட்டணியில் இருக்கும் இவர் சனம் அவர்களை மறைமுகமாக தாக்குவது போல் பலரும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
இந்த வாரம் வெளியில் நீங்கள் மிகவும் மிஸ் செய்யும் நபர்களை பற்றி கூற வேண்டும் என்ற டாஸ்க் நடைபெற்றது அதிலும் தன் கணவன் மற்றும் குழந்தையை பற்றி பேசிய சம்யுக்த தன் தங்கை பாவனாவை பற்றி ஏதுவும் பேசவே இல்லை. ஆனாலும் இருவரும் இந்த லாக் டவுனில் ஒன்றாக பொழுதை போக்கி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
சம்யுக்தவின் தங்கை பாவனா விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர் என்பது நம் அனைவர்க்கும் அறிந்தவையே. தற்பொழுது விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்காத பாவனா ஸ்டார் நிறுவனத்தின் மற்றொரு சேனலான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நிஷா ரியோ ரம்யா பாண்டியன் ஷிவானி ஆஜீத் என பலரும் விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் என்ற நிலையில் சம்யுக்தவும் பாவனாவின் அக்கா என்ற செய்தி ஒரு வேலை பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றுள்ள அனைவருமே விஜய் தொலைக்காட்சியில் உள் ஆட்களா என்ற சந்தேகம் ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது.