இந்த கொரோனா ஊரடங்களில் தினமும் ஒரு திருமணம் என்ற வகையில் பிரபலங்கள் பலருக்கும் திருமணமாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல பாடல் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் சீசன் 3 யின் வெற்றியாளரான சாய் சரணுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. இதில் பிரபலங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
தன் 8 வயது முதல் கர்நாடிக் இசையை பயின்று வந்த சாய் சரண் 2007-ம் ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர் முதல் சீனில் பங்கேற்றார். நன்றாக பாடி செமி பைனல்ஸ் வரை சென்ற சாய் சரண் எதிர்பாரா விதமாக எலிமினேட் ஆனார். அதன் பின்பும் தோல்வியை ஒற்றுக்கொள்ளாத சாய் தன் குரல் வளத்தை மேம்படுத்தி 21 வயதில் சூப்பர் சிங்கர் சீசன் 3 யில் பங்கேற்று வெற்றிபெற்றார். அதற்கு பரிசாக அவருக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடு வழங்கப்பட்டது.
இவரது திறமையை கண்ட இசையமைப்பாளர் இமான் அதை பாராட்டும் விதமாக 2012 யில் அவர் இசையமைத்த இரண்டு படங்களில் சாய் அவர்களுக்கு வாய்ப்பளித்தார். மனம் கொத்தி பறவை திரைப்படத்தின் “டங் டங்” பாடலும் சாட்டை திரைப்படத்தில் “நண்பா வா நண்பா” பாடலும் பாடிய சாய் சரணின் குரல் பட்டி தொட்டியெல்லாம் பரவியது.
தெலுங்கு மற்றும் தமிழில் ௧௨ ற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள சாய் சரண் தற்பொழுது இசையமைப்பளராகவும் மாறி வருகின்றார். இந்த கொரோனா காலத்தில் விஜய் தொலைக்காட்சியில் தற்காலிமாக நடத்தப்பட்ட சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பைனல்ஸ் வரை போக முடியாமல் வெளியேற்றப்பட்டார்.
பல சாதனைகளையும் படைத்து வரும் சாய் சரண் 28 வயதான நிலையில் தனக்கு திருமணம் என்ற செய்தியை தன் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். பாண்டிச்சேரியை சேர்ந்த நந்தினி மற்றும் சாய் சரணின் திருமணம் சென்னையில் கடந்த 29-ம் தேதி நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நடந்து முடிந்தது.
இதில் சந்தோஷ், சாம் விஷால், ஈரோடு மகேஷ் உட்பட விஜய் தொலைக்காட்சி பிரபலங்கள் பலரும் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். ரசிகர்கள் மற்றும் சக போட்டியாளர்கள் கொரோனா சூழ்நிலையை புரிந்து கொண்டு நேரில் செல்லாமல் சமூக வலைத்தளங்களில் வாழ்த்தி வருகின்றனர்.