தமிழ் சினிமாவின் நடிகர் இயக்குனர் தயாரிப்பளார் இசையமைப்பாளர் நடன இயக்குனர் என பல திறமைகளை வெளிப்படுத்தி வரும் ராகவா லாரன்ஸ் முனி திரைப்படம் மூலம் மக்களின் மத்தியில் பிரபலனமானார். அவரது சமூக சேவைகளை பற்றி பலதும் அறிந்த நாம் அவரைப்பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் பெரிதாக அறிந்ததில்லை. அதை அறியவே இந்த பதிவு.

சென்னையில் பிறந்த ராகவா லாரன்ஸ் 1993-ம் ஆண்டு தனக்கு மிகவும் பிடித்த நடிகரான ரஜினிகாந்த நடிப்பில் பி வாசு இயக்கத்தில் வெளியான “உழைப்பாளி” திரைப்படம் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானார். அதன் பின் ஜென்டில்மென், அமர்க்களம், உன்னை கொடு என்னை தருவேன், ரோஜா கூட்டம் போன்ற படங்களில் பல பிரபலங்களுடன் சேர்ந்து பணியாற்றிய லாரன்ஸ். 1999-ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் “ஸ்பீட் டான்சர்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

Raghava

அதன் பின் தமிழ் திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்த லாரன்ஸ் ஒரு சில படங்களுக்கு பின்னர் “ஸ்டைல்” என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக தோன்றினார். எதிர் பார்த்த அளவு அந்த திரைப்படம் வெற்றி தராத நிலையில் 2007ம் ஆண்டு இவரே நடித்து இயக்கிய “முனி” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது இவருக்கு சினிமாவில் ஒரு திருப்பு முனையாகவும் அமைந்தது.

இசையமைப்பு பாடகர் தயாரிப்பாளர் என சினிமாவில் அனைத்து துறைகளிலும் சாதித்த லாரன்ஸ் லதா என்பவரை இவருக்கு வாழக்கை துணையாக தேர்ந்தேடுத்தார். சந்தோசமாக வாழக்கையை தொடங்கிய இத்தம்பதியினருக்கு ராகவி என்ற மகள் பிறந்தார். 17 வயதாகும் ராகவி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் தன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் பலரும் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு இவ்வளவு பெரிய மகளா என்று வியந்து வருகின்றனர். அவரது சில புகைப்படங்கள் உங்களுக்காக!!

Raghava Lawrance Wife Lawrance Daughter Raghavi Lawrance Lawrance Daughter
Raghavi Lawrance
Raghavi Lawrance

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here