ஆறு தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரரான ஏ ஆர் ரஹ்மான் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே பலராலும் பாராட்டப்படுபவர். இசையில் முன்னணியாக திகழும் ஏ ஆர் ரஹ்மான் அவர்கள் பல விருதுகளையும் பரிசுகளையும் வாங்கி குவித்தவர். பல நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் அவர்களை இதுவரை மீசை தாடியுடன் பார்த்ததுண்டா? அப்படி இல்லையெனில் இந்த பதிவு உங்களுக்காக!
௧௯௬௭ ம் ஆண்டு சென்னையில் திலீப் குமராக பிறந்த ஏ ஆர் ரஹ்மான் தமிழ் மட்டுமின்றி அணைத்து இந்திய மொழி ரசிகர்களாலும் போற்றப்படுபவர். இசை குடும்பத்தில் பிறந்த ரஹ்மான் தனது 9 வயதில் தன் தந்தையை இழந்த நிலையில் ரஹ்மானின் தாய் இசையமைப்பு கருவிகளை வாடகைக்கு விட்டு தன் பிள்ளைகளை வளர்த்துள்ளார்.
சிறு வயது முதலே இசையில் ஆர்வம் கொண்ட ஏ ஆர் ரஹ்மான் படிப்பில் தடுமாறினாலும் இசையில் வெற்றிப்பட்டார். அதன்பின், வேறு பள்ளியில் சேர்த்த ஏ ஆர் ரஹ்மான் தனக்கென்ன இசைக்குழு நண்பர்களுடன் உருவாக்கிய நிலையில் அவரது படிப்பையும் பாதிலேயே விட்டார். இசையில் அதிகம் கவனம் செலுத்திய ரஹ்மான் அவர்களுக்கு 1992-ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படம் வாய்ப்பளித்தது.
வாய்ப்பை நன்றாக பயன்படுத்திய ஏ ஆர் ரஹ்மான் ஷங்கரின் முதல் திரைப்படமான ஜென்டில்மென் பாரதி ராஜாவின் கிழக்கு சீமையிலே மணி ரத்தினத்தின் திருடா திருடா போன்ற பல படங்களுக்கு இசையமைத்து அப்பாடல்களை வெற்றியடைய செய்தார். இவரது திறமைகளை கண்ட மற்ற ஹாலிவுட் பாலிவுட் திரைப்படங்களிலும் வாய்ப்பு கிடைத்து யாரும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.
அப்படிப்பட்ட ஜமாபவானின் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. குறும்பு மீசை தாடியுடன் இருக்கும் ஏ ஆர் ரஹ்மானின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!