SPB last song

கொரோனா பாதிப்பால் 50 நாட்களுக்கும் மேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி அவர்கள் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி நம்மை விட்டு பிரிந்தார். இதற்கு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவர் கடைசியாக பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ், ஹிந்தி உட்பட பல இந்திய மொழிகளில் பாடியுள்ள நடிகர் எஸ் பி பி அவர்கள் இது வரை 40,000-ற்கும் மேற்பட்ட பாடல்களை 16 மொழிகளில் பாடியுள்ளார். இத்தனை பாடல்களை தன் வாழ்நாளில் பாடிய முதல் பாடகரும் இவர் தான். இவர் நல்ல பாடகர் என்பது மட்டுமின்றி நல்ல நடிகர் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவில் பிறந்த திரு எஸ் பி பி அவர்கள் 1969- ம் ஆண்டு எம் ஜி ராமசந்திரன் நடிப்பில் வெளிவந்த “அடிமைப் பெண்” என்ற திரைப்படத்தில் “ஆயிரம் நிலவே வா” பாடல் மூலம் அறிமுகமானர். அதன் பின் அவரது குரல் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. ரஜினி கமல் என எல்லா முன்னணி பிரபலங்களின் படங்களிலும் இவர் பாடியுள்ளார். கடைசியாக இவரது குரலில் வெளிவந்த பாடல் தர்பார் திரைப்படத்தில் சும்மாக் கிழி என்ற பாடல் தான்.

அதன்பின் கொரோனா பிரச்சனைகளால் இவர் பாடிய இரண்டு திரைப்படங்களில் பாடல் இது வரை வெளிவராத நிலையில’மூன்று மாதங்களுக்கு முன்னர் இவர் கொரோனவை பற்றி பாடிய பாடல் இப்பொழுது ரசிகர்கள் பார்த்து கண்ணீர்வடித்து வருகின்றனர். அந்த பாடல் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு திறமைவாய்ந்த பொக்கிஷத்தை இழந்தது பலருக்கும் வேதனை அளிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு நிகர் எவரும் இல்லை என்பது உறுதி. அவரது ஆத்ம சாந்தி அடைய அனைவரும் பிராத்திப்போம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here