2000 களில் தன அழகிய சிரிப்பின் மூலம் ரசிகர்களை வளைத்து போட்ட நடிகை லைலா. 1996-ம் ஆண்டு இந்தியா சினிமாவில் அறிமுகமான லைலா “துஷ்மன் துனியா கா” என்ற ஹிந்தி திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பின் தெலுங்கு, மலையாளம், உருது என 2 வருடங்களில் 10-ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த லைலா ௧௯௯௯ம் ஆண்டு பாரதி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த கள்ளழகர் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பின்பும் வருடத்திற்கு மூன்று திரைப்படங்கள் குறை இல்லாமல் நடித்து வந்த லைலா தமிழ் சினிமாவை பொறுத்தவரை சங்கர் இயக்கிய முதல்வன், சரண் இயக்கிய பார்த்தேன் ரசித்தேன், எ ஆர் முருகதாஸ் இயக்கிய தீனா, தரணி இயக்கிய தில் என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். விஜய், அஜித் என பல பிரபலன்களுடனும் நடித்த லைலாவின் ஜோடியாக சூர்யா நடித்த திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்று.
நந்தா, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, பிதாமகன் போன்ற வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து தன் 8 வருட காதலனான மெஹடின் என்ற தோழியாதிபரை 2002-ம் ஆண்டு நிச்சயம் செய்து 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் வெளிநாடுகளில் செட்டில் ஆன இத்தம்பதியினருக்கு 2 மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக திருமணத்திற்கு பின் சினிமாவில் தோன்றுவதை நிறுத்துவது போல் லைலாவும் ௨௦௦௬ க்கு பின் எந்த ஒரு மீடியாவில் சினிமாவிலும் தோன்றவில்லை. ஆனால் தற்பொழுது மீண்டும் துணை கதாபாத்திரங்களில் கம் பேக் கொடுத்து வருகிறார். இவர் அலைஸ் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருவது தற்பொழுது உறுதியாகி உள்ளது. அதனால் திரும்பவும் ட்ரெண்ட் ஆகும் லைலா தன் குடும்ப புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் வயதானவர் போல் தெரியும் லைலாவின் கணவரை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக!