தங்கள் சினிமா வாழ்க்கையில் நூற்றுக்கணக்கான கலைஞர்களை சந்திக்கும் பிரபலங்கள் ஒரு சில நேரங்களில் சாதாரண மனிதர்கள் போலவே இயங்கி தங்கள் காதலை சக கலைஞர்களுடன் பகிர்ந்து விடுகின்றனர். அந்த மாதிரி காதல் வயப்பட்டு சேர்ந்த ஜோடிகளும் உண்டு சேராத பல ஜோடிகளும் உண்டு. அந்த வகையில் மிகவும் பேசப்பட்ட காதல் ஜோடி சிம்பு நயன்தாரா தான்!

சிம்பு நடித்து இயக்கிய வல்லவன் திரைப்படத்தில் சிம்புவிற்கு பழக்கமான நயன்தாரா முதலில் நண்பர்களாக தங்கள் உறவை தொடர்ந்து அது காதலாக மாறியது. இருவரும் காதிலிப்பது உறுதியாகி எப்பொழுது திருமணம் என்ற பேச்சுகள் ரசிகர்களின் மத்தியில் ஆரம்பித்த நிலையில் இருவருக்கும் இடையில் இருந்த காதல் முறிந்ததாக செய்திகள் வெளியாகின.

Simbu Nayanthara

இதற்கு மறுப்பு தெரிவிக்காத பிரபலங்கள் தொடர்ந்து சினிமாவில் மட்டும் நடித்து வந்தனர் அதன் பின் சில வருடங்களில் வில்லு திரைப்படத்தை இயக்கிய பிரபு தேவாவுடன் காதலில் விழுந்து நயன்தாரா வேறு வழியிலும் பல சர்ச்சைகளில் சிக்கிய சிம்பு வேறு வழியில் பயணித்து வந்தனர். அந்த பயணத்தின் பொழுது சிம்புவிடம் நயன்தாரா உடன் ஏற்பட்ட காதலை பற்றி கேட்ட பொழுது அவர் கூறுகையில்

“நாங்கள் இருவரும் உண்மையாகத் தான் காதலித்தோம் அனால் சூழ்நிலை காரணமாக பிரிந்து விட்டோம். பிரிந்தாலும் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வருகின்றோம்! எனக்கு காதல் புதிதல்ல நயன்தாராவிற்கு முன்பே பலரை காதலித்து உள்ளேன்” என்று கூறினார். இவர்கள் நல்ல நண்பர்கள் என்று குறிப்பிடுவது போலவே காதல் முறிவிற்கு பின் இது நம்ம ஆளு திரைப்படத்தில் ஒன்றாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

Simbu Nayanthara

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here