தமிழ் சினிமாவில் அணைத்து விதமான கதாபாத்திரங்களுக்கும் போட்டி இருந்தாலும் ஒரு சில கதாபாத்திரங்களுக்கு மட்டும் இன்னும் ஆட்கள் தேவை என்ற நிலையே அமைந்துள்ளது அப்படி ஒரு கதாபாத்திரம் தான் வயதில் மூத்த தாத்தா பாட்டி கதாபாத்திரங்கள் அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் பல ஆண்டுகளாக தோற்றமளிப்பவர் பாட்டி சீனியம்மா.
ரஜினி விஜய் அஜித் என பல பிரபலங்களின் படங்களிலும் நடித்துள்ள சீனியம்மா 2017-ம் ஆண்டு அட்லீ இயக்கிய மெர்சல் திரைப்படத்தில் விஜய்க்கு தாயாக நடித்து மிகவும் பிரபலமானார். சிட்டுக் குருவி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சீனியம்மாவை அன்றுமுதல் சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் அவரை சீட்டு குருவி பாட்டி என்றே அழைக்கின்றனர்.
சீட்டு குருவி பாட்டி விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் மட்டுமின்றி அஜித் நடித்த விசுவாசம் அஜித் நடித்த படங்களிலும் நடித்துள்ளார் சின்னத் திரையிலும் நடித்து வரும் சீனியம்மா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
குணச்சித்திர கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வரும் சிட்டுக் குருவி பாட்டி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது சினிமா படப்பிடிப்பு அனுபவத்தை பற்றி ரசிகர்களுக்கு படிகிர்ந்திருந்தார். அதில் அஜித் படப்பிடிப்பின் பொழுது அவர் தான் எனக்கு ஷேர் போடுவார் எனவும் நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை திட்டுவேன் எனவும் கூறியுள்ளார். மேலும் பல பிரபலங்களை பற்றி பேசிய காணொளி உங்கள் பார்வைக்காக!