Kushboo Car

90ஸ் களில் பல இளைஞர்களுக்கும் கனவுக் கன்னியாக திகழ்ந்த நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவில் தனி அங்கீகாரத்தையே பதிவு செய்துள்ளார். விஜய் ரஜினி கமல் என தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள குஷ்பூ ரசிகர்களின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிந்தருந்தார். அவரது கார் தற்பொழுது விபத்திற்கு உள்ளாகி கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

௨௦௦ ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள குஷ்பூ அவர்கள் 2000-ம் ஆண்டு தமிழ் பட இயக்குனர் மற்றும் நடிகர் சுந்தர் சி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பின் தன் பிள்ளைகளை வளர்ப்பதில் 10 ஆண்டுகளாக கவனத்தை செலுத்தி வந்த குஷ்பூ அவர்கள் 2010 ம் ஆண்டு திராவிட கட்சி ஒன்றில் சேர்ந்தார். 4 வருடங்களுக்கு பின் காங்கிரஸில் சேர்ந்த குஷ்பூ சில மாதங்களுக்கு முன் பாரத ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார்.

kushboo

பாரத ஜனதா கட்சியில் முக்கிய பங்கு வகிக்கும் குஷ்பூ அவர்கள் சமீபத்தில் திருமாவளனுக்கு எதிராக குரல் கொடுத்து பலராலும் வரவேற்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குஷ்பூ திருமாவளனுக்கு எதிராக போராட்டம் செய்ய சிதம்பரம் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டதையும் பலரும் எதிர்த்து வந்தனர். இந்நிலையில் தற்பொழுது அவர் கார் விபத்திற்கு உள்ளாகியுள்ளது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

கூடலூரில் நடந்த வேல் யாத்ராவில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து காரில் புறப்பட்ட குஷ்பூ அவர்களின் காரில் டேங்கர் லாரி ஒன்று மேல்மருவத்தூர் அருகில் நேராக வந்த பலமாக மோதியுள்ளது. அதில் பயணித்த குஷ்பூ கடவுள் அருளால் சில காயங்களுடன் தப்பித்ததாக தன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த விபத்து சந்தேகத்துக்குரியதாக இருப்பதால் போலீஸில் புகார் அளித்து அதனை விசாரித்து வருவதாகவும் குஷ்பூ தெரிவித்துள்ளார். இது ஒரு வேலை முன்பாகவே பிளான் செய்யப்பட்ட விபத்தாக இருக்குமோ என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. சிதைந்த மீட்கப்பட்ட காரின் புகைப்படங்கள் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

Kushboo Car Accident Kushboo Car Accident Kushboo Car Accident

Kushboo Car Accident

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here