Ramya Pandian Somasekar relationship

தமிழ் பட இயக்குனர் துரை பாண்டியன் அவர்களின் மகளான ரம்யா பாண்டியன் தேசிய விருது பெற்ற ஜோக்கர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அவருக்கான அங்கீகாரம் பெரிதளவில் கிடைக்கவில்லை. அதன் பின் போட்டோஷூட் மூலம் இளைஞர்கள் மத்தியில் வைரலான ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார்.

ரம்யா பாண்டியன் அவர்களுக்கு சிறப்பாக அமைந்த குக் வித் கோமாளி அவருக்கு குடும்ப ரசிகர்கள் கவனத்தையும் ஈர்க்க வழி வகுத்தது. புகழுடன் இவர் செய்த சேட்டைகளும் ரசிக்கும் வகையில் அமைந்தது. இதனால் பெரும் வரவேற்பை பெற்ற ரம்யா பாண்டியனிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் பங்கேற்ற ரம்யா பாண்டியனிற்கும் நடிகர் சோம சேகர் அவர்களுக்கும் காதல் இருப்பதாக ரசிகர்கள் பலராலும் பேசப் பட்டு வந்தது.

Ramya Pandian

அதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ரம்யா பாண்டியன் தனக்கும் சோமுவிற்கும் இடையில் உள்ள உறவைப் பற்றி ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். நேற்று ரசிகர்களுடன் கலந்துரையாட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வந்த பொழுது ரசிகர்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதிலளித்து வந்தார். அப்பொழுது ரசிகர்கள் சோமு அவர்களை பற்றி கேட்ட பொழுது

“தனக்கும் சோமுவிற்கு இடையில் உள்ளது நல்ல நட்பு மட்டுமே அதை தவிர்த்து வேறு எதுவும் இல்லை! நீங்கள் எத்தனை முறை கேட்டாலும் இதுவே என் பதில்!” என்று கூறியுள்ளார். ரசிகர்கள் பலரும் இவரது ஜோடி பொருத்தத்தை விரும்பி இருந்த நிலையில் ரம்யாவின் பதிலானது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரம்யாவின் சினிமா பயணத்தை பொறுத்தவரை ரம்யா பாண்டியன் அவர்கள் சூர்யா தயாரிப்பில் நடித்து வருகிறார்.

Ramya Pandian Somasekhar

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here