bhavani character revealed

பல நாள் காத்திருப்பிற்கு பின்னர் வெளியான மாஸ்டர் திரைப்படம் மக்களின் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று பல சாதனைகளையும் படைத்து வருகின்றது. இந்த திரைப்படத்தில் மக்கள் பலராலும் பேசப்பட்ட கதாபாத்திரம் பவானி கதாபாத்திரம் தான் அதில் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்தது யார் தெரியுமா?

கார்த்தி நடித்து வெளியான கைதி திரைப்படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் அவர்களை வைத்து லோகேஷ் கனகராஜ் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார் என்றே கூற வேண்டும். குழந்தைகளை தவறான பாதையில் செல்வதற்கான காரணத்தை சிறப்பாக எடுத்துக்காட்டிய லோகேஷ் அவர்கள் படத்தில் மாஸ்ஸிற்கும் குறை வைக்கவே இல்லை!

Vijay in Master

அதில் பவானி கதாபாத்திரம் நம்மை வாயடைத்து போக வைத்தது. அப்படிப்பட்ட கதாபாத்திரத்துக்கு அடித்தளம் போட்டது இளம் வயது பவானி தான். அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தது நாட்டாமை திரைப்பட குழந்தை மஹேந்திரன் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 6 மொழிகளில் 100 மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்த மஹேந்திரன் தான் இந்த திரைப்படத்தின் குட்டி பவானி.

அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தின் கதாநாயகியான மாளவிகா மோஹனன் அவர்களும் மஹேந்திரனும் 2014 ம் ஆண்டு வெளியான விழா திரைப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பலருக்கும் பிடித்த மஹேந்திரனின் நடிப்பு சமூக வலைத்தளங்களில் வரவேற்பு பெற்று வருகின்றது.

Mahendran ChildActor MahendranMahendran

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here