தமிழ் பட நடிகர் விஜயகுமார் அவர்களின் மகள் வனிதா 1995-ம் ஆண்டு விஜயுடன் கூட்டணியில் சந்திராலேகா என்ற திரைப்படத்தில் அறிமுக செய்யப்பட்டிருந்தாலும் அவருக்கான அங்கீகாரம் நினைத்த அளவிற்கு கிடைக்க வில்லை. அதன் பின் ஒரு சில படங்களில் நடித்த வனிதா தன் முதல் திருமணத்திற்கு பின்னர் சினிமாவில் தோன்றுவதையே முழுமையாக நிறுத்திவிட்டார்.
அவருக்கு திருமண வாழக்கையும் பெரிதளவில் கைகொடுக்காத நிலையில் தன் பொருளாதாரத்தை காக்க 2013-ம் ஆண்டு மீண்டும் சினிமாவில் துணை கதாபாத்திரமாக அறிமுகமானார். அதையடுத்து பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது வனிதாவுக்கு பெரும் விளம்பரத்தை பெற்றுத் தந்தது.
அதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி டைட்டில்யுடன் ரசிகர்களையும் உருவாக்கி தந்தது. சின்னத் திரையில் அதிகம் தோன்றி வரும் வனிதா தற்பொழுது மீண்டு வெள்ளித் திரையில் ஹீரோயினாக கம் பேக் கொடுப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதை வனிதாவும் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார்.
வனிதாவின் முதல்படத்தை தயாரித்து இயக்கிய நம்பிராஜன் தான் இந்த படத்தையும் இயக்கவுள்ளாராம். அதுமட்டுமின்றி இது பெண்ணியத்தை சார்ந்த படம் என்பதையும் வெளியிட்டுள்ளனர். இத்திரைப்படத்திற்கு அணல் காற்று என பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் இந்த வருட கடைசியில் வெளிவர வாய்ப்புள்ளதாக பேசப் பட்டு வருகின்றது. மேலும் இதன் நடிகர் மற்றும் மற்ற கலைஞர்களை பற்றி எந்த ஒரு செய்தியும் வெளிவரவில்லை.
View this post on Instagram