பல வெளிப்படாத கலைஞர்களுக்கும் மார்க்கெட் இழந்த கலைஞர்களுக்கும் மீண்டும் மக்களின் மத்தியில் பிரபலமடையச் செய்யும் நிகழ்ச்சியாக அமைந்து வருகின்றது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சி மூலம் பலரும் பிரபலமாகியுள்ள நிலையில் சீசன்-4 யின் முக்கிய ஆட்டக்காரர் பாலாஜி முருகதாஸ்.

பிக் பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளிலிருந்தே தனக்கு தோன்றியபடி தனக்கு பிடித்தபடி விளையாடிய பாலாஜி முருகதாஸ் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார் அதுமட்டுமின்றி 2 ம் பரிசையும் தட்டிச் சென்றார். ஆனால் அந்த மகிழ்ச்சி சில வாரங்கள் கூட நிலைக்கவில்லை. காரணம் பாலாஜியின் தந்தை மரணம் தான்.

Bigg Boss season 4 winner

சில நாட்களுக்கு முன்பாகவே பாலாஜி தந்தை மறைந்ததாக செய்திகள் வெளியாகிய நிலையில் அந்த செய்தியை பாலாஜியின் அண்ணன் ரமேஷ் உறுதி படுத்தியுள்ளார் அதுமட்டுமின்றி பாலாஜியும் இதுவும் கடந்து போகும் என்ற வாசகத்தை தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

தன் தந்தை குடி பழக்கத்திற்கு அடிமையானவர் என பாலாஜி பிக் பாஸ் நிகழிச்சியின் பொழுது தெரிவித்த்திருந்தாலும் தன் தந்தை மறைந்த துயரத்தை தாங்க முடியாமல் வேதனையில் கதறி அழும் காணொளி தற்பொழுது சமூக வலைத் தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது மேலும் அவரின் குடும்ப புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகின்றது. அப் பதிவுகள் உங்கள் பார்வைக்காக! பாலாஜியின் தந்தை மறைவிற்கான காரணம் இன்னும் அறியப் படவில்லை.

balaji murugadoss family

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here