பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தை தொடர்ந்து கோலிவுட் சின்னத் திரை நடிகை சித்ராவின் மரணம் நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் தோன்றி மக்களின் மத்தியில் பிரபலமான சித்ரா தனக்கென்ன தனி அங்கீகாரத்தையே படைத்தார்.

அதன்பின், பட்டி தொட்டியெல்லாம் பிரபலமடைந்த சித்ராவிற்கு ஹேமந்த் என்பவருடன் கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. அதற்கு சந்தோஷமான தம்பதியினராக திரைகளில் வலம் வந்த சித்ரா மற்றும் ஹேமந்த் இடையில் சில கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு சித்ரா அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 9-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என செய்திகள் வெளியாகின.

Chithra and Hemanth

சித்ராவின் பெற்றோர் போலீசாரிடம் கொடுத்த புகாரின் பெரில் விசாரித்த பொழுது ஹேமந்த்திற்கு இந்த தற்கொலையில் முக்கிய பங்கு இருப்பதாக அறியப்பட்டது மேலும் இருவரும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் போலீசார் இது கொலையா அல்ல தற்கொலையா என்பதை விசாரித்து வருகின்றனர்.

சித்ரா இந்த மண்ணை விட்டு சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது. அந்த வகையில் சித்ரா ஒரு கால் உயிருடன் இருந்தால் அவரது திருமணம் இன்று தான். பல பெண்களின் கனவு நாளை சித்ரா அனுபவிக்காமலே சென்றது அவரது ரசிகர்களின் மத்தியில் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நாளை பிரபலங்கள் பலரும் அவரது நினைவாக பகிர்ந்து வருகின்றனர்.

Diya menon about chithu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here