நடிகை பாவனாவை நம்மில் யாராலும் மறக்கவே முடியாது. அவர் தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் அவரது நடிப்பு மற்றும் அழகு பாவனைகள் நம் அனைவரையும் கவர்ந்து விட்டது என்றே கூற வேண்டும். நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் தோன்றாத பாவனா தற்பொழுது தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள அவரது கணவரின் புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகின்றது.

கேரள மாநிலம் திரிசூரை பிறப்பிடமாக கொண்ட கார்த்திகா மேனன் என்கின்ற பாவனா தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடா போன்ற மொழிகளில் 80-ற்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து வெற்றி கண்டுள்ளார். 2002-ம் ஆண்டு மலையாள சினிமாவில் டேபுட் செய்த பாவனா 10-ற்கும் மேற்பட்ட மலையாள படங்களுக்கு பின்னர் மிஸ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலம் 2004-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Bhavana

அத்தபின் கிழக்கு கடற்கரை சாலை வெயில் போன்ற படங்களில் நடித்து பாவனாவிற்கு ஜெயம் ரவியுடன் நடித்த தீபாவளி திரைப்படம் தமிழ் சினிமாவில் திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து பல பிரபலங்களுடன் நடித்த பாவனா அஜித் நடித்த அசல் திரைப்படத்தையே தமிழ் சினிமாவின் தன் கடைசி திரைப்படமாக அமைத்துக்கொண்டார்.

2010 ற்கு பின்னர் தெலுங்கு கன்னடா மலையாளம் மொழிகளில் மட்டும் நடித்து வரும் பாவனா 2018 ம் ஆண்டு கன்னடா திரைப்பட இயக்குனர் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் இந்த ஜோடியை ஒன்றாக தமிழ் ரசிகர்கள் பலரும் பார்த்திடாத நிலையில் பாவனா தனது 3 ம் ஆண்டு திருமண நாள் நினைவாக ஜோடியாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் உங்கள் பார்வைக்காக!

Bhavana Husband Bhavana Husband

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here