kajal Aggarwal confirms her marriage

இந்த கொரோனா லாக் டவுனில் சினிமா பிரபலங்கள் பலருக்கும் திருமணம் நடந்து வரும் நிலையில் அடுத்தப்படியாக தமிழ் திரைப்பட நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமணம் என்ற செய்தி பரவலாக பரவி வந்தது. இவர் சமீபத்தில் திருமணத்திற்கு ரெடி என்று கூறி இருந்த நிலையில் பலரும் வதந்திகளை கிளப்பி வந்தனர் அதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க காஜல் அகர்வால் தான் திருமணம் செய்பவரை பற்றி மனம் திறந்துள்ளார்.

மகாராஷ்டிராவில் பிறந்து தெலுங்கு திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகினருக்கு அறிமுகமான காஜல் அகர்வால் கடந்த 2008-ம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளிவந்த “பழநி” திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் டேபுட் செய்தார். அதன் பின் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் வெற்றி கிடைக்காத நிலையில் 2012-ம் ஆண்டு வெளியான மாற்றான், துப்பாக்கி ஆகிய திரைப்படங்கள் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

Kajal Agarwal

அதற்கு பின் வேற லெவலாக மாறிய காஜல் அகர்வால் ஆல் இன் ஆல் அழகு ராஜா, ஜில்லா, மாரி, கவலை வேண்டாம், விவேகம், மெர்சல், கோமாளி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியாக உள்ளே “இந்தியன்-2” திரைப்படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

16 ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் காலடி எடுத்து வைத்த காஜல் அகர்வாலுக்கு 35 வயதாகிய நிலையில் அவருக்கு மனமகன் பார்ப்பதாக சில மாதங்களுக்கு முன் அவரது பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர். அதன் முடிவாக காஜல் அகர்வாலுக்கு ஏற்ற மன மகனை கண்டு பிடித்துள்ளனர்.

Kajal Agarwal

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்சலு என்பவர் தான் அந்த அதிஷ்டசாலி. இன்டிரியர் டிசைனிங் செய்து வரும் இவருக்கு இந்தியா முழுவதும் பிரபலமான பர்னிச்சர் கம்பெனி ஒன்றை நடத்திவருகிறார். இவரைத் தான் திருமணம் செய்ய போவதாக காஜல் அகர்வால் அதிகார பூர்வமாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவர்களது திருமணம் வருகின்ற 30-ம் தேதி நடக்கவிருக்கிறது.

லாக் டவுன் காரணமாக சிம்பிளாக நடக்கும் இவரது திருமண செய்தியை அறிந்த ரசிகர்கள் அரை மனதோடு வாழ்த்தி வருகின்றனர். காஜல் அகர்வாலை ஒப்பிடும் பொழுது கவுதம் கொஞ்சம் சுமார் தான் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Gautham Kitchlu

 

View this post on Instagram

 

♾🙏🏻

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here