90’ஸ் மற்றும் 2கே-யில் பிரபலமாக இருந்த தமிழ் நடிகைகள் பலரும் கம் பேக் தருவதாக தெரிவித்திருந்த நிலையில் மீனா ஜெனிலியா போன்றவர்களை தொடர்ந்து சோனியா அகர்வாலும் திரைப்படங்களில் தோன்ற போவதாக தெரிவித்திருந்தார். இதனால் இயக்குனர்கள் பலரும் அவருக்கு தரும் கதாபாத்திரங்களை கண்டு அதிருப்தி ஆனா சோனியா அகர்வால் “நான் நயன்தாராவை விட எந்த விதத்தில் குறைந்தவள்” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

1982-ம் ஆண்டு சண்டிகர் மாநிலத்தில் பிறந்த சோனியா அகர்வால் ‘2000களில் கதாநாயகியாக இந்திய திரையுலகில் கோடிக்கட்டி பறந்தவர். செல்வா ராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “காதல் கொண்டேன்” திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான சோனியா அகர்வாலுக்கு முதல் படமே சூப்பர் ஹிட்டானது அதை தொடர்ந்து கோவில், 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, புதுப்பேட்டை போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த சோனியா 2006-ம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த இயக்குனர் செல்வா ராகவனை காதலித்து திருமணம் செய்தார்.

Sonia Agarwal

திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் தோன்றாத சோனியால் அகர்வால் சில கருத்து வேறுபாடுகளால் தன் கணவருடன் விவாகரத்து ஆனது. ஆதலால் 2011-ம் ஆண்டு மீண்டும் கம் பேக் கொடுத்த அகர்வாலுக்கு பெரிய அளவில் வெற்றிகள் கிடைக்கவில்லை, நடிகைகளுக்கு திருமணம் ஆகி விட்டாலே மார்க்கெட்டில் விலைபோகாத தக்காளியாக மாறும் நிலை சோனியா அகர்வாலையும் விட்டு வைக்கவில்லை. மார்க்கெட் இல்லாததால் துணை கதாபாத்திரங்களில் தோன்றிவருகிறார்.

அந்த துணை கதாபாத்திரங்களில் நடித்தாலும் அதன் மேல் பெரிய அளவில் உடன்பாடு இல்லாத சோனியா அகர்வால் எனக்கு ஏன் கதாநாயகி பாத்திரங்கள் தருவதில்லை என்று பொதுவான கேள்வியயை சமீபத்தில் நடந்த பேட்டியில் கேட்டுள்ளார்.

இதைப் பற்றி அவர் கூறுகையில் “எனக்கு இப்பொழுதெல்லாம் அம்மா கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான கால் சீட்கள் பலவும் வருகின்றன! எனக்கு அதில் நடிப்பதில் உடன்பாடு இல்லை. நானும் நயன்தாரா த்ரிஷாவின் வயதை சேர்ந்தவளே, அவர்களை போல நானும் உடலை நன்றாக பராமரித்து தான் வருகின்றேன், எனக்கு தரும் அம்மா கதாபாத்திரங்களை அவர்களுக்கு ஏன் தருவதில்லை என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.

நயன்தாராவை விட ஒரு மடங்கு அழகில் அதிகம் இருக்கும் சோனியா அகர்வாலுக்கு கதாநாயகி கதாபாத்திரங்கள் கிடைக்காதது கொஞ்சம் வருத்தம் தான்! சோனியா அகர்வால் இப்பொழுது சினிமாவில் தோன்றுவதை குறைத்து கல்யாண நிகழ்ச்சிகளை எடுத்து நடத்தும் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார்.

Sonia AgarwalSonia Agarwal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here