எப்பொழுதும் நமக்கு பக்கத்து வீட்டாரோடு சண்டை இருந்து கொண்டே இருப்பது போல் தற்பொழுது தமிழ் சினிமாவில் தினமும் ஒவ்வொரு பிரபலங்கள் சண்டையிட்டு வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன் இயக்குனர் பாரதி ராஜா “இரண்டாம் குத்து” திரைப்படத்தை பற்றி விமர்சனம் கூறிய நிலையில் அதற்கு வயடிக்கும் படி அத்திரைப்படத்தின் இயக்குனர் பதிலளித்திருந்தார். அதை தொடர்ந்து தற்பொழுது நடிகர் சூரிக்கும் விஷ்ணு விஷாலுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது.
பல கவனிக்கப்படாத படாத கதாபாத்திரங்களில் நடித்த பின்னர் “வெண்ணிலா கபடி குழு” திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரோட்டா சூரியாக அறிமுகமானவர் நடிகர் சூரி. அதே திரைப்படத்தில் நடிகராக டெபுட் செய்தவர் நடிகர் விஷ்ணு விஷால். பல தடுமாற்றங்களுக்கு பின் இந்த வெற்றி படத்தை தந்த இவர்கள் நல்ல நண்பர்களாக பழகி வந்தனர். பழக்கத்தோடு நிறுத்திவிடாமல் மேலும் ஜீவா, வேலைனு வந்துட்ட வெள்ளைக்காரன், சிலுக்குவருபட்டி சிங்கம் போன்ற படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.
பணம் பத்தும் செய்யும் என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்களது நடிப்பிலும் பணம் விரிசலை உண்டாக்கியுள்ளது. அன்புவேல் ராஜன் மற்றும் ரமேஷ் தயாரிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் “வீரதீர சூரன்” என்ற திரைப்படத்தில் நடித்த சூரிக்கு ரூபாய் 40 லட்சம் சம்பள பாக்கி உள்ளதாகவும் அதை தர மறுப்பதாகவும் சூரி புகார் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி ரமேஷ் என்பவரிடம் ரூபாய் 2.70 கோடி நிலம் வாங்க கொடுத்தாகவும் அதிலும் மோசடி ரமேஷ் செய்துள்ளார் என்று சூரியின் தரப்பிலிருந்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி பல சர்ச்சைகளில் மாட்டிக்கொண்டிருக்கும் ரமேஷின் மகன் தான் நடிகர் விஷ்ணு விஷால். தன் தந்தை மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும்படி தற்பொழுது விஷ்ணு விஷால் சூரிக்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இது மாதிரியான பொய்யான குற்றச்சாட்டுகள் மன வேதனையை உண்டாக்கின்றது. மேலும், சூரி தான் எங்களுக்கு பணம் தர வேண்டியுள்ளது. 2017-ம் ஆண்டு “கவரிமான் பரம்பரை” என்ற திரைப்படத்திற்காக பேசப்பட்டு அட்வான்ஸ் சூரிக்கு கொடுக்கப்பட்டது அதன் பின் சில பிரச்சனைகளால் திரைப்படம் எடுக்கப்படவில்லை அதற்கு சூரி வாங்கிய அட்வான்ஸ் தரவில்லை. உண்மை வெளிவரும் வரை ரசிகர்கள் பொறுமையாக இருக்கவும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு சூரியிடம் இருந்து எந்த விதமான பதிலும் வெளிவரவில்லை.
ITS EASY TO ACCUSE OTHERS
HARDER TO CHECK ON YOURSELF
– BLESS#MOMENTOFTRUTH#உண்மைஒருநாள்வெல்லும் pic.twitter.com/nXaV7bLM9E— VISHNU VISHAL – stay home stay safe (@TheVishnuVishal) October 9, 2020