நடிகர் ஆர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் மிகவும் பேசப்படும் பிரபலம் ஆவர். பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர் ஆர்யா இரண்டு ஆண்டுகளுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “எங்க வீட்டு மாப்பிள்ளை” என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இதனால் ஆர்யாவுடன் பழக்கமான அபர்னதி இப்பொழுதும் ஆர்யாவை காதலிக்கிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களின் இடையே எழுந்துள்ளது.
2018-ம் ஆண்டு 37 வயதான நடிகர் ஆர்யாவிற்கு மணப்பெண் தேடுவதாக கூறி ஆரம்பித்த இந்த ரியாலிட்டி ஷோவில் 16 பெண்கள் பங்கேற்றிருந்தனர். பல நாடுகள் மற்றும் மாநிலங்களில் இருந்து பங்கேற்ற இந்த 16 பேரில் தான் ஒருவரை நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்வதாக அறிவித்திருந்தனர். இதனால் பலரும் அவரது மனதை கவர உழைத்த நிலையில் அவர் பைனல்ஸில் பங்கேற்ற 3 பெண்களையும் திருமணம் செய்ய மறுத்தார்.
பைனல்ஸில் பங்கேற்ற சீதாலட்சுமி ஹரிஹரன், அகதா, சூசானா ஆகிய முவரும் மனமுடைந்த நிலையில் அதற்கு முன்பே எலிமினேட் ஆனா அபர்னதி என்ற பேஷன் டிசைனர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். இவர் ஆர்யாவின் மீது மிகவும் காதல் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. துறு துறுவென விளையாட்டு பெண்ணாக இருந்த இவரை ஆர்யாவிற்கும் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் டாஸ்க்களில் சிறப்பாக செய்யாத அபர்னதி முன்னரே எலிமினேட் ஆகி திருமணம் செய்யும் வாய்ப்பை நழுவ விட்டார்.
நிகழ்ச்சி முடிந்த பின் யாரையும் தேர்ந்தெடுக்காத ஆர்யா அவர்கள் கஜினிகாந்த் திரைப்படம் மூலம் தனக்கு பழக்கமான சயீஷா என்பவரை கடந்த 2019 ம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதியினர் சந்தோசமாக தங்கள் வாழ்க்கையையும் நடித்த வருகின்றனர்.
இந்நிலையில் போட்டியில் பங்கேற்ற அபர்னதி அவர்கள் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் பெயருடன் ஆர்யாவின் பெயரையும் சேர்த்தி வைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. ஆர்யாவின் பெயரை மறைமுகமாக 6 ya என்று வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைக்கண்ட நெட்டிஸின்கள் ஆர்யா விரித்த காதல் வலையில் சிக்கிய இந்த அபர்னதி இன்னும் ஆர்யாவை மறக்கவில்லை என்றும் அவருக்காக ஏங்குகிறார் என்றும் கூறி வருகின்றனர். கண்டிப்பாக காரணம் இல்லாமல் இந்த பெயரை வைத்திருக்க முடியாது ஆதலால் இதில் ஏதோ உண்மை ஒளிந்திருக்கிறது எனவும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இவர் தற்பொழுது ஜி வி பிரகாஷ் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவரவுள்ள ஜெயில் என்ற திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு சம்பவத்தை செய்த ஆர்யா அவர்களை ரசிகர்கள் பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். இதைப் பற்றி உங்கள் கருத்து!