Actor premji

கல்யாணமே வேண்டாம் என்று அடம் பிடித்து வந்த பிரேம்ஜி தனது திருமணம் குறித்து சூப்பரான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரனின் மகன் தான் பிரேம்ஜி அவர்கள். சிம்பு இயக்கி.

அவரே நடித்து வந்த வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் தான் பிரேம்ஜி.இதனைத் தொடர்ந்து சென்னை 28 படத்தில் காமெடி நகராக நடித்திருந்தார்.அந்த படத்தின் கதாபாத்திரம் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.சென்னை 28 படத்துக்கு பிறகு சத்தம் போடாதே, சந்தோஷ் சுப்ரமணியம், சத்யம், ஒன்பதுல குரு, சேட்டை, நாரதன், சிம்பா என அடுத்தடுத்து பல படங்களில் பிரேம்ஜி அமரன் நடித்தார்.மற்ற இயக்குநர்களின் படங்களில் நடித்ததை விட, தனது சகோதரனான வெங்கட் பிரபுவின் சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி,மாசு என்கிற மாசிலாமணி படங்கள் பிரேம்ஜிக்கு அதிக பெயரை பெற்றுத்தந்தது.தயாரிப்பாளரான பிரேம்ஜியின் சகோதரர் வெங்கட் பிரபு தனது தம்பி இல்லாமல் எந்த படமும் இயக்க மாட்டாராம். இதுவும் ஒரு முக்கியமான தகவல். சிம்புக்கு கம்பேக் கொடுத்த மாநாடு படத்திலும் நடித்திருந்தார். தற்போது அண்ணன் வெங்கட்பிரபு தளபதி 68 படத்தை இயக்கி வருகிறார். படத்தின் டைட்டில் G.O.A.T என்று வைக்கப்பட்டுள்ளதாக முன்னதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திலும் பிரேம்ஜி ஒரு முக்கியமான ரோலில் நடித்து வருகிறார். முரட்டு சிங்கிள்.

premji with venkat prabhu

44 வயதாகும் பிரேம்ஜி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார்.கடந்த ஆண்டு, பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கங்கை அமரன் கூறியிருந்தார்.ஆனால், பிரேம்ஜியோ இனி கல்யாணமே கிடையாது நான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் என்று சோஷியல் மீடியாவில் பேசி வருகிறார். ஆனால்,பிரேம்ஜியின் அப்பா கங்கை அமரன் பிரேம்ஜிக்கு திருமணத்தை செய்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறது.திருமணத்திற்கு ரெடி.

இந்நிலையில்,பிரேம்ஜி புத்தாண்டு தினமான நேற்று தனது எக்ஸ் தள பக்கத்தில்,புத்தாண்டு வாழ்த்துக்கள், இந்த ஆண்டு நான் திருமணம் செய்து கொள்கிறேன்.டாட் என்று பதிவிட்டுள்ளார்.இந்த பதிவினைப்பார்த்த ரசிகர்கள் இனி நீங்கள் முரட்டு சிங்கிள் இல்லை என்றும் இந்த முடிவுக்கு வாழ்த்துக்கள் என்றும் கருத்துக்களை பகிர்ந்து கமெண்ட் பாக்ஸ்சை நிரப்பி வருகின்றனர்.அண்மையில் பிரேம்ஜி பாடகி வினைத்தாவுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ சோசியல் மீடியாவில் பரவியதால் இருவரும் காதலித்து வருவதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.இது ஒரு புறம் இருக்க தற்போது. பிரேம்ஜி அவர்கள் தனது திருமணத்திற்கு சம்மதம் சொல்லியுள்ளார் அனைவரும் வாழ்த்துக்கள் சொல்லி வருகின்றனர்.

Premji tweet

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here