suriya apologises raja mouli

நடிகர் மற்றும் இயக்குனருமான சூர்யா எக்கச்சக்கமான வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென்ற அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். தமிழ் மட்டுமின்றி தென் இந்திய மொழிகள் அனைத்திலும் கலக்கிய சூர்யா ஒரு நிகழ்ச்சியில் ராஜமௌலியிடம் மன்னிப்பு கேட்கும் பழைய வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றது.

கிட்டத்தட்ட 40 திரைப்படங்களில் தோன்றியுள்ள நடிகர் சூர்யாவிற்கு 39 ம் படமான சூரரை போற்று திரைப்படம் சுதா கங்கோரா இயக்கத்தில் OTT தளத்தில் வெளியிடப்பட்டிருந்தாலும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. காக்க காக்க, உன்னை நினைத்து, பிதாமகன், பேரழகன் என பல வெற்றிப் படங்களை நடித்துள்ள சூர்யா தனது அஞ்சான் படத்தின் தெலுங்கு இசை வெளியிட்டு விழாவில் பங்கேற்றிருந்தார்.

Actor Suriya

அந்நிகழ்ச்சிக்கு ராஜமௌலி நாகார்ஜூனா உள்ளிட்ட தெலுங்கு திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றிருந்த வேலையில் சூர்யா ராஜமௌலி படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டதாகவும் அது சூர்யாவின் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறு எனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் ராஜமௌலியுடன் இணைத்து எந்த கதாபாத்திரத்திலும் நடிக்கத் தயார் பாகுபலியில் சின்ன கதாபாத்திரத்திலும் நடிக்க ரெடி எனவும் சூர்யா மேடையில் கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா சமீபத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவை பொறுத்தவரை சூர்யா தற்பொழுது பாண்டியன் ராஜன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அத்துடன் மாதவன் திரைப்படத்தில் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்து வருகிறார். ராஜமௌலி தெலுங்குவில் RRR என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here